Wednesday, September 26, 2018

நந்தியாவட்டை நன்மைகள்.


நந்தியாவட்டை அடுக்கான மலர்களை உடையது. வெள்ளை நிறப்பூக்களை உடைய இது கண்நோய்க்கு மருந்தாகிறது.
பூக்கள் கண் எரிச்சலை, கண் சிவந்த நிலையை போக்குகிறது.
பற்களை பலப்படுத்தும். நுண்கிருமிகளை அழிக்க கூடியது. வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும்.
நந்தியாவட்டை பூக்களை பயன்படுத்தி கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நந்தியாவட்டை பூக்கள், நல்லெண்ணெய்.
செய்முறை:
நந்தியாவட்டை பூக்களின் இதழ்களை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு தைலமாக காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து எடுக்கவும்.
இதை வடிகட்டி கண்களை சுற்றியுள்ள கருவளையம் மீது பூசும்போது கருவளையம் இல்லாமல் போகும்.
நந்தியாவட்டை பூக்கள் மெழுகை போன்றது. மேல்பற்றாக போடும்போது பூஞ்சைக் காளான்களை போக்கும்.
இந்த பூ குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், கண்களில் மேல் வைத்திருப்பதாலோ அல்லது தண்ணீரில் பூவை ஊறவைத்து, அந்த நீரை கொண்டு கண்களை கழுவுவதாலோ கண் எரிச்சல் சரியாகும்.
பார்வை தெளிவுபெறும். நந்தியாவட்டை பூக்களை சுத்தம் செய்து கசக்கி ஓரிரு சொட்டுகள் கண்ணில் விடுவதால் கண்படலம் சரியாகும்.
நந்தியாவட்டை இலைகளை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நந்தியாவட்டை இலைகள், மிளகு, சீரகம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், நந்தியாவட்டை இலைகள் 5 எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் 10 மிளகு, சிறிது சீரகம் சேர்த்து தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி தினமும் காலையில், குடித்துவர உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இது, வலி நிவாரணியாக விளங்குகிறது.
வாய்கொப்பளித்து வர பல் வலி குணமாகும்.
நந்தியாவட்டை இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நந்தியாவட்டை இலை, தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், நந்தியாவட்டை இலைகளை நீர்விடாமல் அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை மேல்பூச்சாக பயன்படுத்திவர வெட்டுக்காயம், சிராய்ப்பு காயம், ஆறாத புண்கள் ஆறும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...