Sunday, September 23, 2018

நறு­மண பொருட்கள் உற்­பத்தி: 6வது இடத்தில் தமி­ழகம்.

சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், நறு­மணப் பொருட்கள் உற்­பத்­தியில், தமி­ழகம், 6வது இடத்தை பிடித்­துள்­ளது. இது குறித்து, தேசிய தோட்­டக்­கலை வாரியம் வெளி­யிட்­டுள்ள இரண்­டா­வது முன்­கூட்­டிய மதிப்­பீட்டு அறிக்கை விவரம் வரு­மாறு:
கடந்த நிதி­யாண்டில், நறு­மணப் பொருட்கள் உற்­பத்­தியில், ஆந்­திரா, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இப்­பி­ரிவில், இம்­மா­நி­லத்தின் உற்­பத்தி, 12.17 லட்சம் டன் என்ற அளவில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ராஜஸ்தான் (9.87 லட்சம் டன்), குஜராத் (8.48 லட்சம் டன்), மத்­திய பிர­தேசம் (4.54 லட்சம் டன்), கர்­நா­டகா (3.81 லட்சம் டன்) ஆகி­யவை உள்­ளன.
No automatic alt text available.
தமி­ழகம், 3.49 லட்சம் டன் நறு­மணப் பொருட்­களை உற்­பத்தி செய்து, 6வது இடத்தை பிடித்­து உள்­ளது.இதை தொடர்ந்து, அசாம் (2.87 லட்சம் டன்), உத்­தர பிர­தேசம் (2.12 லட்சம் டன்), மேற்கு வங்கம் (2.07 லட்சம் டன்) ஆகி­யவை உள்­ளன. இந்த பட்­டி­யலில், 10வது இடத்­தில் உள்ள ஒடிசா, 1.81 லட்சம் டன் நறு­மணப் பொருட்­களை உற்­பத்தி செய்­துள்­ளது. இவ்­வாறு, அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
நறு­மணப் பொருட்கள் பட்­டி­யலில், பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம், கடுகு, மஞ்சள், மிளகு, இஞ்சி உள்­ளிட்­டவை அடங்­கி­யுள்­ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...