Friday, September 28, 2018

பெற்றோர் பிள்ளை உறவு.

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம்பழம் போன்றது. புளியம்பழம் பிஞ்சாக இருக்கும்போது அதன் ஓடும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் ஒன்றோடொன்று ஒட்டி, பின்னிப்பிணைந்து நிற்கும். இரண்டையும் எளிதில் பிரிக்கமுடியாது. அதேபோல் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பெற்றோரும் பிள்ளையும் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாதவர்களாய் இருக்கவேண்டும். பெற்றோர் புளியங்காயின் ஓடுபோன்றவர்கள். பிள்ளைகள் உள்ளிருக்கும் சதைப்பகுதியைப் போன்றவர்கள்.
புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு, சதைப்பகுதியை விட்டு மெல்லமெல்ல விலகும். அதேபோல் பிள்ளைகள் வளரவளர பெற்றோர் பிள்ளைகளின் நெருக்கத்தைக் குறைத்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.

புளியங்காய் நன்றாக முற்றிப் பழமானவுடன் அதன் ஓடு சதைப்பகுதியை விட்டு தனியே விலகி, உள்ளிருக்கும் சுளைப்பகுதியை பாதுகாத்து நிற்கும். அதேபோல், பிள்ளைகள் வாலிப வயதை அடைந்து, வளர்ச்சி பெற்ற முழுமனிதர்களாய் ஆகும் நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகிநின்று, புளியம்பழ ஓட்டைப் போல, பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
புளியம்பழம் பழுத்து பயன்பாட்டிற்கு வரும்போது, ஓடு சுளையிலிருந்து தனியே பிரிக்கப்பட்டு, புளிச்சுளை பயன்பாட்டிற்குச் செல்லும்போது ஓடு ஒட்டிக்கொண்டே செல்லாது. சுளை விருப்பப்படி பயன்படுத்தப்படும். பயன்படுத்தப்படவும் வேண்டும். அதேபோல் பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி இலக்குப்படி, தங்கள் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டும். பிள்ளைகள் விருப்பத்தைப் புறக்கணித்து தங்கள் விருப்பத்தை பெற்றோர்கள் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. புளியம்பழ ஓட்டிற்கு உள்ள பெருந்தன்மை பெற்றோருக்கும் வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...