Wednesday, September 26, 2018

சிரிப்புலக சக்கரவர்த்தி திரு.#நகேஷ் என்கின்ற நாகேஸ்வரனின் பிறந்தநாள் இன்று.

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம் தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில்!
பெற்றோர் கிருஷ்ணராவ்- ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் –குண்டப்பா!
கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் #எம்ஜிஆர்!
அன்று முதல் என்றும் பென்மனச்செம்மல் மீது அடங்காபற்றும், தீரத அன்பும், மிக்க மரியாதையும் கொண்டவர்.
#புரட்சித்தலைவர்-ருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர் மட்டும்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்! நாகேஷை நம் இந்திய அரசாங்கம் கெளரவபடுத்தாதது,வருத்தத்திற்க்குரியது,கண்டிக்கதக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...