இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த கெளரவம் என்றால் அது ''பைவ் ஸ்டார்'' ஃபீல்டு மார்ஷல் பட்டம்தான்..
அதாவது இத்தகைய கௌரவம் பெற்றவர்கள், உயிரோடு இருக்கும்வரை அவர்கள் பணியில் இருப்பவர்களே..பொது நிகழ்ச்சிகளில் முழு சீருடையுடன் அவர் கலந்துகொள்ள முடியும்..
ரிட்டயர்மெண்ட் என்பதே கிடையாது..பென்ஷன் என்ற பேச்சே கிடையாது..இறுதி மூச்சுவரை முழு சம்பளம் பெறுவார்கள்..

இந்த பீல்டு மார்ஷ்ல் கௌரவம் பெற்றவர்கள், சாம் மேனக்சா, கே.எம். கரியப்பா மற்றும் அர்ஜூன் சிங் ஆகிய மூவர் மட்டும.. இந்திய ராணுவத்தின் மூன்று மாணிக்கங்களாக கருதப்படுபவர்கள்..
இப்படிப்பட்ட பெருமை கொண்ட பீல்டு மார்ஷல்களில் மேனக்சாவும் கரியப்பாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில். எஞ்சியிருந்த ஒரே மார்ஷ்ல் அர்ஜூன் சிங்கும் 98 வயதில் நேற்று காலமாகிவிட்டார்..
அப்துல் கலாம் உடலுக்கு மரியாதை செய்யவந்த போதுதான் சமீபமாய் வெளிச்சத்திற்கு வந்துபோனார் இவர்..
96 வயதைகடந்தும், வாக்கிங் ஸ்டிக்கை சிறிது நேரம் உதறிவிட்டு கம்பீரமாய் நின்று சல்யூட் அடித்தவர்..
கொல்கத்தா அருகே உள்ள பனகார்ஹ் விமான படைத்தளத்திற்கு அர்ஜூன் சிங் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது..
1965ல் ஒரு மணிநேரத்தில் விமானப்படையை போர்க்களத்தில் இறக்கி பாகிஸ்தானை அக்நூர் தாக்குதலிலிருந்து பந்தாடிய விதத்தால் நமது பாதுகாப்பு அமைச்சகமே வியந்துபோனதெல்லாம் ஒரு வரலாறு..
வருந்தத்தையும் மீறி..பெருமைப்படுகிறோம்
👇
👇
👇
👇
😭
😭






No comments:
Post a Comment