Friday, September 21, 2018

உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்போம்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை. இன்று பலரது வீடுகளில் பெருமாளுக்கு பூஜை செய்வார்கள். நம்மில் பலருக்கு பூஜை என்பது பிரசாதங்களை ஸ்வாமியின் முன் வைத்து நிவாதனம் செய்து கற்பூரம் காட்டும் போது கைஎடுத்து கும்பிடுவது தான் பக்தி, பூஜை என்று புரிந்து வைத்திருக்கிறோம். அது தவறு, குறைந்தது பத்து நிமிடமாவது மனதை ஒருநிலைப் படுத்தி அமைதிபடுத்த வேண்டும். நிவேதனம் என்றால் தெரியப்படுத்துதல் என்று பொருள். ஆண்டவனின் அருளால் நமக்கு உண்பதற்காக கிடைத்தவற்றை அவன் முன் வைத்து இவையிவைகள் உன்னால் எனக்கு கிட்டியுள்ளது என்று ஆண்டவனிடம் நாம் தெரியப்படுத்துவதே நிவேதனம் செய்தல் என்பதாகும். ஆனால் நாம் என்னவோ ஆண்டவனுக்கு கொடுப்பதாகவே நினைத்து செயல்படுகிறோம். இதைப் போன்று முக்கியமான நாட்களாக நாம் நினைக்கும் தினங்களில் மனதை ஒருநிலைப் படுத்தும் நேரத்தை அதிகரித்து உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்போம். எண்ணத்திலும் செயலிலும், வார்த்தையிலும் எதிர்மறையான விஷயங்களுக்கு இடம் தராமல் இருத்தலும், ஒருவித பூஜையே. எல்லாவற்றிலேயும், எல்லோரிடத்திலும், எல்லா நேரமும் குறைகளை மட்டுமே சொல்பவர்களும், ஏளனம் செய்வதுவருபவர்களும், தவறாகவே புரிந்து கொள்பவர்களும், எந்த நேரத்தில், எவ்வளவு நேரத்தில், எந்தக்கடவுளை, எப்படி வணங்கினாலும் நிம்மதி, சந்தோஷம், வெற்றி கிட்டாது. ஆகவே மனத்தூய்மையுடன் நாம் செய்யும் எல்லா செயல்களிலும் செயல்பட்டால் ஆண்டவன் நாம் கேட்காமலே நமக்கு தேவையானதை கிடைக்கச்செய்வான். ஓம் நமோ நாராயணாய.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...