Thursday, September 20, 2018

ஊழல்வாதிகள் எப்படி இவ்வளவு தைரியமாக ஊழல் செய்கிறார்கள்?

எவ்வளவு ஊழல் செய்தாலும் தண்டனையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம் என்கிற தைரியம்.
இந்த தைரியத்திற்கு காரணம் என்ன?
வலுவில்லாத ஊழல் ஒழிப்புச் சட்டங்கள்.
ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மட்டும் வலுவாக இருந்திருந்தால் இந்நேரம் பலர் பதவியில் இல்லாமல் தண்டனையில் இருந்திருப்பர்.
ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும். திட்டமிட்டு ஊழல் செய்பவர்களை அதை விட புத்திசாலித்தனமாக தகர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சட்டங்களை நமது அரசுகள் இயற்ற வேண்டும்.
ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், நமது மத்திய மாநில அரசுகள், இருக்கும் சட்டங்களை இன்னும் பலவீனமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் எவ்வளவு கொடூரமானது என்றால் இந்த சட்டங்களை இனி நாம் ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் என்றே சொல்ல முடியாது. ஊழல் வளர்ப்பு சட்டங்கள் அல்லது ஊழல்வாதிகள் பாதுகாப்பு சட்டங்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு மோசமான திரிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடம் , ஏன் ஊடகங்களிடமுமே கூட மிக குறைவாக இருக்கிறது.
அறப்போர் இயக்கம், இதைப்பற்றிய விழிப்புணர்வுக்காக வரும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் 'என்னங்க சார் உங்க சட்டம்'? என்ற பெயரில் ஒரு மாபெரும் பொது மக்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ளது.
இதில் தன்னார்வலராக பணியாற்ற விரும்புபவர்கள் இங்கே பதிவு செய்து கொள்ளலாம்
ஊழல் ஒழிப்பை மக்களைத் தவிர வேறு யாரும் உண்மையாக முன்னெடுக்க முடியாது. நாம் இல்லை என்றால் வேறு யார்? இப்போது இல்லை என்றால் வேறு எப்போது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...