குளம்படியில் நீர் படிந்தால் குருவி குடித்துப்போம்.. வீராணத்தில் நீர் சேர்ந்தால் நாடு செழித்துப்போம்’’-- ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரம் திவ்ய பிரபந்தமாகத் தொகுத்த வைணவப் பெரியார் நாதமுனிகள் அருளிய வரிகள் இவை!
வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து
14 கிமீ தொலைவில் உள்ள காட்டுமன்னார்கோவில் அதனை ஒட்டிய லால்பேட்டை
,கொள்ளுமேடு,வாழகொல்லை இவற்றை கிழக்கெல்லையாகவும்
சேத்தியாதோப்பை வடக்கெல்லையாகவும் வட்டத்தூர் மணவெளி சித்தமல்லி ஆகியவற்றை மேற்கெல்லையாகவும் கொண்ட சுமார் 38.65 ச.கிமீ பரப்பளவு கொண்ட முழுதும் மனித ஆற்றலை கொண்டு வெட்டப்பட்ட ஏரி!
சென்னை-கும்பகோணம் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பிலிருந்து அணைக்கரை NH-36-ல் செல்லும்போது ஏரி நீர் நிரம்பிய காலத்தில் அதன் மேற்கெல்லையின் ஒரு பகுதி புலப்படும் !

பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்குத்தெரியும், அமரர் கல்கி அவர்கள் கதையை வீராணம் ஏரிக்கரை
யிலிருந்து ஓர்வசந்தகாலத்தில் சோழநாட்டு இளவரசி குந்தவை நாச்சியார் வீராணம் ஏரிக்கரையில் படகுப்பயணம் மேற்கொள்வதாக ஆரம்பிப்பார்! அதேபோல கதை இங்கேயே முடியும்! அதேபோல இவ்வேரியில் உள்ள 64 மதகுகளை கணக்கில்கொண்டே
ராமானுஜர் 64 பீடங்களை நிர்மாணம் செய்தாரென்பதாக கல்கி ஆசிரியர் குறிப்பிடுகிறார்!
(Kalki makes a reference to the fact, that Ramanujacharya decided on the number of 64 Peetas - 64 simhasanathipathigal based on the number of 64 openings in the lake.)

வீரநாராயணபுரம் என்ற விண்ணகர் என்பதுதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பராந்தக சோழன் தனது சேனைகளைக் கொண்டு வீரநாராயணபுரத்தில் பிரம்மாண்ட ஏரியை வெட்டி, அதற்கு தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரையே சூட்டி (வீரநாராயணபுரம் ஏரி), ஏரியை பெருமாளின் சொத்தாகவும் அறிவித்தான். கி.பி. 907- கி.பி. 935 காலத்தில் ஏரி வெட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த பராந்தக சோழ மன்னனே சிதம்பரம் நடராஜர் கோயில் மூலவர் சிலை இருக்கும் இடமான கனக சபைக்கு பொற்கூரை வேய்ந்தவனாவான் . அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது !
44,856 ஏக்கர் பாசனம்
வீராணம் ஏரியின் மொத்த நீர்ப் பரப்பு பகுதி 38.65 சதுர கி.மீ. கொள்ளளவு 1.455 டிஎம்சி
(ஆயிரம் கோடி கன அடி =
1 டிஎம்சி)ஏரியின் கீழ்ப் புறத்தில் உள்ள 28 பாசன வாய்க்கால்கள், மேல் புறத்தில் உள்ள 6 பாசன வாய்க்கால்கள் மூலம் தற்போது மொத்தம் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரி மூலம் 18 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயமும், 1,150 ஏக்கரில் குள்ளக்கார் பருவ விவசாயமும், 550 ஏக்கரில் வெற்றிலை விவசாயமும் நடைபெற்ற காலமும் உண்டு. ஆனால், 1975-ல் காவிரி தாவா ஏற்பட்ட பிறகு இங்கே இருபோக விவசாயம் இல்லாமலே போய்விட்டது.
கொள்ளிடம் நீர் அணைக்கரையிலிருந்து வடவார்மூலம் வீராணத்தில் நிரப்பப்படுகிறது ! சென்னைக்கு குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டம் அம்மையார் ஜெயலலிதா காலத்தில் மேற்கொள்ளப்பட்டது!
காவிரியில் நீர்வற்றிய நிலையில் சென்னைக்கு வீராணம் குடிநீர்
கனவாய் உள்ளது! தற்போதைய காவிரி வெள்ளத்தில் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது..

No comments:
Post a Comment