நம்ப மாட்டீங்க? -ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை…
நம்ப மாட்டீங்க? – ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை…
காபி அருந்துவது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல

அதேநேரத்தில், கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் காபி அருந்துவது உடல் நலத்துக்குத் தீங்கானது என்கிறது இந்த ஆய்வறிக்கை.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித உடலில்
காபியின் ஆதிக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் காபி ( Coffee ) அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி அருந்துபவர்களை, இதயம் ( Heart ) சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவாகத் தாக்குகின்றன என்று தெரியவந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனால் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரி யரும், ஆய்வாளர்களில் ஒருவருமான பால் ரொடரிக், காபி அருந்துவதால்
மட்டும் இம்மாற்றம் ஏற்படுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்.

மேலும் அவர், வயது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா, உடற்பயிற்சி செய்பவரா என்பது எல்லாம் ஒருவரது ஆரோக்கி யத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார். காபியின் நன்மை குறித்து சமீபத்தில் வந்த பல ஆய்வறிக்கைகளுக்குத் துணையாக இந்த ஆய்வும் உள்ளது.

No comments:
Post a Comment