Friday, August 16, 2019

அன்புராஜ் தற்போது திகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.

திக வீரமணி மகன் அன்புராஜ்
திருமணம் வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் தான் நடந்தது...???
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்சனையை ஆதரித்து பேசியிருக்கிறாதே அவர் தன்னை ஒரு இந்துவாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளாரா ? என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கராத்தே தியாகராஜன் திக ஆசிரியர் வீரமணி கூட இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வீரமணியின் மகன் அன்புராஜ் தற்போது திகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.
அவர் கடந்த 1982 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவர்கள் இருவருக்கும் கடலூர் பதிவாளர் அலுவலக வாசலில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில்...
தான் தான் திருமணம் செய்து வைத்தாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அந்த ஆண்டு அன்புராஜையும், சுதாவையும் யாருக்கும் தெரியாமல் கடலூர் அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.
பின்னர் அங்குள்ள பதிவாளர் அலுவலக வாசலில உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் தானும், நண்பர்களும் திருமணம் செய்து வைத்தாக தெரிவித்தார்.
ஒரு பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்ட ஒருவருக்கு வீரமணி திகவின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கலாமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...