Saturday, August 10, 2019

விஞ்ஞான பூர்வமாக வாங்க முடியும்!.!!!

ஷரத்து 370ன் நீக்கத்துக்கு முன்பு
காஷ்மீரில் யாரும் சொத்து வாங்க முடியாதா?.... முடியும்...????
விஞ்ஞான பூர்வமாக வாங்க முடியும்!.!!!
------------------------------------------------------------------
வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க 
முடியாது. அப்படி சொத்து வாங்குவதை ஷரத்து
370 அனுமதிக்காது. இப்படித்தான் நாம் அனைவரும்
நம்பிக் கொண்டிருந்தோம்.
ஆனால் இது உண்மை அல்ல என்கிறார் இங்குள்ள
கோடீஸ்வரக் குடும்பத்தின் அடிவருடி ஒருவர்.
காஷ்மீரில் தலைவர் நிறைய சொத்துக்களை
வாங்கிப் போட்டுள்ளார் என்கிறார் அவர்.
பருக் அப்துல்லா குடும்பத்துடன் நெருங்கிய உறவு
உள்ள குடும்பம் அது. முன்பு ஷேக் அப்துல்லா
காலத்திலேயே மலர்ந்து மணம் பரப்பிய உறவு அது.
இப்போது ஓமர் அப்துல்லா குடும்பத்துடனும்
அந்த இனிய உறவைப் பேணி வரும் குடும்பம் அது.
மேலும் மப்டி முகமது சையது, மெஹபூபா ஆகியோர்
குடும்பத்துடனும் இக்குடும்பத்திற்கு நீடித்த நல்ல
உறவு உள்ளது.
காஷ்மீர் ராஜ வம்ச குடும்பத்துடன் உள்ள உறவை
வைத்துக் கொண்டு, காஷ்மீரில் பினாமி பெயர்களில்
இந்தக் குடும்பம் நிறையச் சொத்துக்களை
வாங்கிப் போட்டுள்ளது.
காஷ்மீரிகளை பினாமிகளாக வைத்துக் கொண்டு
அவர்களின் பெயரின் சொத்து வாங்கிப் போட்டால்,
அதை ஷரத்து 370 எப்படித் தடுக்கும்?
இதெல்லாம் விஞ்ஞான பூர்வ வழிமுறைகள்.
காஷ்மீரிலும் இக்குடும்பத்திற்கு இன்று நிறைய
சொத்து உள்ளது.
இன்றைக்கு மோடியின் பாசிச நடவடிக்கையால்
இந்தச் சொத்து பறிபோய் விடுமோ என்ற
ஆற்றாமையில் அந்தக் குடும்பம் தவிக்கிறது.
எனவே ஷரத்து 370ஐ அக்குடும்பம் தீவிரமாக
எதிர்க்கிறது.நாமும் எதிர்ப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...