1. உங்களின் வருமானம் பற்றி தற்பெருமையாக வெளியிடத்தில் சொல்லிக்கொள்ளாதீர்கள்.
2. உங்களோட கருத்தை வலியுறுத்தும் நோக்கில் பேசிக்கொண்டிருக்கும் இன்னொருவரின் உரையாடலில் இடைநுழையாதீர்கள்.
3. பெரும் நேரம் செலவழிச்சு சமைச்சிட்டீங்கன்ற காரணத்திற்காக விருந்தாளிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட வற்புறுத்தாதீர்கள்.
4. ஒருத்தர் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கும் போது உங்களின் மொபைல் போனை நோண்டி கொண்டிருக்காதீர்கள்.
5. பொதுவில் ஒருத்தர் எதாவது தவறா பேசிட்டா அதை அவங்க தனியா இருக்கும் போது தன்மையா எடுத்து சொல்லி புரிய வையுங்க.
6. யாராவது அவங்க போன்ல எதையாவது காட்டினா பார்த்திட்டு அப்டியே திருப்பி கொடுங்க போனை.. அது உள்ள நுழைஞ்சு ஆராய்ச்சி பண்ணாதீங்க...
7. யாரவது அழகா இருக்காங்கன்னா அவங்களையே மொறைச்சு பார்த்திட்டு இருக்காதீங்க. அதுக்கு பதிலா மென்மையான புன்னகையோடு போய் ஒரு ஹலோ சொல்லுங்க.
8. மன்னிக்கவும், நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிக்க மறக்காதீர்கள்.
9. பொதுவெளியில் இருக்கும் போது ஸ்பீக்கர் போனில் பேசாதீர்கள்.
10. அடுத்தவர்களை மென்மையோட நடத்துங்கள்.. அவர்கள் உங்களை புண் படுத்தினாலும்....
11. வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை நாசூக்காக பிரயோகியுங்கள்... அதிலேயே குளிச்சுட்டு வராதீங்க.
12. அடுத்தவங்க பேசுற மூடுல இல்லன்னா, "என்னாச்சு... என்னாச்சு..."ன்னு திரும்ப திரும்ப கேட்டு அவங்களை தொந்தரவு செய்யாதீங்க.

No comments:
Post a Comment