தமிழர்கள் மங்களப் பொருளாக கருதுகிறார்கள். மஞ்சளில் கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரா மஞ்சள், குச்சி மஞ்சள், குண்டு மஞ்சள், என பல வகைகள் உள்ளன.
1. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள ஜிஞ்சிபெரின், ஒலியரோசின் எனும் வேதிய பொருட்கள் பித்தம், கபம், தலவலி, தோல் நேய்கள், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
2. மஞ்சளில் புரதச்சத்து, கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
3. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
4. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
5. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
6. கொதிக்க வைத்த பாலில் சிறிது மஞ்சள், மிளகு போட்டு குடித்தால் தொல்லை தரும் இருமல் நீங்கும்.
7. மஞ்சளுடன் ஆடா தொடை இலையை அரைத்து பசு நீர் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நமச்சல் போன்றவை விலகும்.
8. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்து பூசி வந்தால் கொப்புளங்கள் ஆறும். மேலும் பாத வெடிப்புகளுக்கு மஞ்சள் பற்றைத் தடவலாம்.
9. மஞ்சளானது வலி நிவாரணியாகவும், கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கிறது.
10. மஞ்சள் பொடியை நெல்லிக்காயைக் காய்ச்சிய நீரில் கலந்து காலை, மாலை அருந்த மது மேகம் குணமாகும்.
No comments:
Post a Comment