Thursday, August 1, 2019

தொடைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்.

இன்றைய காலத்தில் பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் குறைப்பதற்காக சந்திக்கும் பிரச்சினைகள் பல உள்ளது.
அதில் தொப்பை பிரச்சனைக்கு அடுத்தப்படியாக தொடைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதும் என்பது பெரிய போராட்டமாகவே உள்ளது.
தொடையில் அதிகப்படியாக கொழுப்பு படிந்து விட்டால் அதனை உடற்பயிற்சி மூலம் கரைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிடும்.
இப்படி தொடைகளில் உள்ள கொழுப்புக்களை சரியான டயட் மூலம் குறைக்க முடியும்.
கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருட்களை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், நிச்சயம் விரைவில் குறைக்கலாம் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது தொடைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவும் சில எளிய வழிகள் என்னவென்று பார்ப்போம்.
அன்றாடம் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொண்டு வாருங்கள். இதனால் அவை உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கி, கொழுப்புக்களை விரைவில் கரைக்க உதவும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக அலுவலகத்தில் அவ்வப்போது நடந்து கொண்டு இருங்கள். இதனால் தொடைகளில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
மிளகாய் சேர்த்த உணவுகளை உட்கொண்டு வந்தால் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் சீக்கிரம் கரையும்.
நட்ஸில், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.
நீச்சல் மேற்கொண்டால், தொடை மட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள அனைத்து கொழுப்புக்களும் குறைந்து, உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, 1 வாரம் அல்லது 2 வாரத்திற்கு ஒருமுறை மலை ஏறும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் விரைவில் தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, கால்கள் வலிமையடையும்.
எடையைக் குறைக்க நினைத்தால், தண்ணீரை அவசியம் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீரானது உடலின் ஆற்றலை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்க உதவும்.
சிட்ரஸ் பழங்களை காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட், கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிக சேர்த்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்பட்டு, இடுப்பு, வயிறு, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, ஃபிட்டாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.
இரும்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, உடற்பயிற்சியை செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைத்து, சீக்கிரம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.
சூரியனிடமிருந்து பெறும் வைட்டமின் டி, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் இச்சத்து உதவி புரிகிறது.
பாலை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதன் மூலம் தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரையும் போது, எலும்புகள் வலிமையடையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...