Wednesday, August 7, 2019

வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணத்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்?.!!

வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ மனிதனுக்கு இன்றியமையாத மருந்து என்றே கூறலாம். நமது இல்லத்தில் நடைபெறும் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முகப்பில் வாழை மரத்தை கட்டி வைக்கின்றனர். இந்த வாழை மரம் போல் நாமும் எல்லாவிதத்திலும் அனைவருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:
வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து 15நாட்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உடல் சோர்வு போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் உடனடியாக சீராகிவிடும். வயிறு கோளாறு உள்ள ஆடு மாடுகளுக்கு கூட இது தான் மருந்தாக இருக்கிறது. இது பற்றிய நன்மை தெரிந்தவர்கள் தினந்தோறும் இதனை உணவிற்கு பயன்படுத்துவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...