காவல் உதவி ஆய்வாளர் தவறு செய்தார் அல்லது செய்யவில்லை. அது இரண்டாம் பட்சம். ஓர் பொறுப்புள்ள அதிகாரி அதுவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுபவர். அவரை கண்டிப்பதற்கும் ஒரு முறை இருக்கிறது. ஏதேனும் ஒரு தனி அறையில் மக்கள் கண்பார்வை படாத இடத்தில் வைத்து கண்டித்திருக்கலாம். அதை விட்டு மூன்றாம் தர மனிதர்களிடத்தில் காண்பிப்பது போல் மக்கள் பலர் குழுமி இருக்கும் பொது இடத்தில் கண்டித்திருப்பது நியாயம் இல்லை.
கலைக்ட்டர் 10 மணிக்கு அலுவலகம் வந்து அதிகபட்சம் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று விடுவார். ஆனால் காவல்துறையில் பணிபுரிபவர்கள் 24 மணிநேர வேலை. காவல்துறையினர் மக்களிடம் நேரடியாக போராட வேண்டும். அதுவும் கோவிலில் அனைத்து சூழ்நிலைகளையும் உணர்ந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம். காவலர்களுக்கு இருக்கும் பணிச்சுமையை மறந்து கோபாதாபங்களை அடக்கிக்கொண்டு மக்களை சிரமம் இன்றி தரிசனம் செய்ய பொறுமையுடன் கையாள வேண்டிய பணி. எனவே கலைக்ட்டர் நடந்து கொண்டவிதம் முகம் சுளிக்க வைக்கிறது.
No comments:
Post a Comment