Thursday, April 9, 2020

விண்ணப்பிக்கிறேன்...!

கொரோனா தடுப்பு நிதிக்காக எம்பி க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு பறிப்பதும்,எம்பி க்கள் சம்பளத்தில் 30% குறைத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாட்டில் இருந்து திமுக,கம்யூனிஸ்ட்டு,விசிக கட்சிகள் எதிர்ப்பு. :- செய்தி.
இந்த சம்பளத்தில் 30% குறைப்பு மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைப்பது என்பது வெறும் தமிழ்நாடு எம்பிக்களுக்கு மட்டுமல்ல.
நாட்டின் ஜனாதிபதி, துனை ஜனாதிபதி,பிரதமர்,அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள்,எம்பிக்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேச லெட்டியுனட் ஜெனரல்கள் என எல்லோருக்குமே தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் 30% குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் கிடைக்கும் 7,900 கோடி ரூபாயை கூடுதலாக கொரோனா நிவாரன பணிக்கு செலவிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதற்க்கு 303 மக்களவை எம்பிக்களையும்,85 மாநிலங்களவை எம்பிக்களையும் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் ,மத்திய அமைச்சர்கள் என யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எல்லோருமே முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆளானப்பட்ட சோனியா ,அவரது சீமந்த புத்திரன் ராகுலும் கூட இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாதியை கொள்ளையடித்து அவர்கள் வீட்டு உலையில் போட்டு வைத்துள்ள திமுகவும், திமுகவால் 40 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட சிவப்பு துண்டு கம்யூனிஸ்ட்டுகளும்,25 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட திருமாவளவனின் விசிக கட்சியும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்...? கொரோனா கொடிய வைரஸ் நோயிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதை விட இவர்களுக்கு இந்த நேரத்திலும் மோடி எதிர்ப்பு என்ற கேவலமான அரசியல் நோக்கம் தான் முக்கியமாக போய்விட்டதா....?
திமுக கட்சியெல்லாம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுகளால் வழங்கப்பட்டு வந்த தொகுதி மேம்பாட்டு நிதிகளை திருடாமல் சுருட்டாமல் நேர்மையாக தொகுதிகளுக்கு செலவிட்டிருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளும் நல்ல வளர்ச்சி பெற்றிருக்குமே. இதுவரை மத்திய அரசு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதிகளை எல்லாம் பொய் கணக்கு காட்டி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இப்போது என்னவோ மிக யோக்கியமான எம்பிக்களை போல தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தினால் எப்படி தொகுதிக்கு பணி செய்வது என்று குள்ளநரி போல ஊலையிட்டுக்கொண்டு இன்னும் யார் தலையில் மிளகாய் அரைக்க பார்க்கிறார்கள் திமுக ,விசிக,கம்யூனிஸ்ட்டு கட்சிகள்....!
இனியும் தேசியத்தமிழர்கள் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நம்பி ஏமாற தயாராக இல்லை...!
எங்களுக்கு எங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லும்,செயலுமே #வேத_வாக்கு போன்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...