Wednesday, April 15, 2020

சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு ஹோமம்.

சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு ஹோமம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பிராயச்சித்த ஹோமம் நடைபெற்ற போது எடுத்த படம்.



















சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவும், அது முடிந்த உடன் சித்திரை தேரோட்டத்துக்கான கொடியேற்றமும் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற வேண்டிய பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டன. அதேநேரம் ஆனால் கோவிலில் தினமும் நடைபெற வேண்டிய அனைத்து கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. பூச்சொரிதல் விழாவையொட்டி மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை கடந்த 5-ந்தேதி முடித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வீட்டில் இருந்த படியே தங்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் தேரோட்டம் நடைபெறாததால், மாரியம்மனுக்கு பிராயச்சித்தமாக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. வசந்தமண்டபம் முன் நடந்த இந்த ஹோமத்தை தொடர்ந்து, நவசக்தி அர்ச்சனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதற்கிடையே நேற்று மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவை எடுத்துக்கூறி கலைந்து போகச்செய்தனர். ஒரு சில பக்தர்கள் கோவிலின் முகப்பு வாயில் முன்பாக பூக்களை வைத்தும் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். ஒரு சிலர் கோவிலுக்கு வந்த வயதான மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் பக்தர்கள் மேலும் வருவதை தடுக்கும் வகையில் கோவிலின் முகப்பு வாயில், கோவிலின் பின்புறம், கடைவீதி, சமயபுரம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...