
முத்திரை
மனித உடலில் முக்கியமான ராஜ உறுப்புக்கள் என்றழைக்கப்படும் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை சிறப்பாக இயங்க வேண்டும்.
பெருவிரல் - நெருப்பு
சுண்டுவிரல் - நீர்
மோதிரவிரல் - நிலம்
நடுவிரல் - ஆகாயம்
ஆள்காட்டி விரல்- காற்று
நெருப்பு மூலகம் - இதயம், சிறுகுடல், இதய மேலுறையை கட்டுப்படுத்தும் (பெருவிரல் நுனி)
நில மூலகம் - மண்ணீரல், இரப்பையை கட்டுப்படுத்துகிறது (மோதிர விரல் நுனி)
காற்று மூலகம் - நுரையீரல், பெருங்குடலை கட்டுப்படுத்துகிறது (ஆள்காட்டி விரல் நுனி)
நீர் மூலகம் - சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகிறது (சுண்டு விரல் நுனி)
ஆகாய மூலகம் - கல்லீரல், பித்தப்பையை கட்டுப்படுத்துகிறது (நடு விரல் நுனி)
முத்திரை என்பது நமது கைவிரல் நுனிகளை இணைத்து ஒரு அழுத்தம் கொடுத்து மன ஒருநிலைப்பாட்டுடன் செய்யும் யோக பயிற்சியாகும். வெறும் விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கிறோம். அதனால் ஒவ்வொரு மூலகத்தைச் சார்ந்த உள் உறுப்புக்கள் பஞ்சபூத சக்தியை பெற்று மிகச் சிறப்பாக இயங்கும். ராஜ உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும் பொழுது நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். எந்த ஒரு கிருமி, வைரசும் நம்மைத் தாக்காது.
No comments:
Post a Comment