சென்னையில் மசூதிகளில் பதுங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதி ஒன்றில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்கள் 5 பேரும், 3 பெண்களும் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர் மதப் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்த 8 பேரையும் கைது செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாததால், அதன் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
கொரோனா தொற்று பரவிய பகுதியாக அப்பு மேஸ்திரி தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள மசூதியில் சிலநாட்களாக பதுங்கியிருந்த 16 எத்தியோப்பிய நாட்டு முஸ்லிம் நபர்களை காவல்துறையினரின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்றனர். அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியவில்லை. இந்நிலையில் கூட்டம் கூட்டமாக மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முஸ்லிம்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

No comments:
Post a Comment