Saturday, October 17, 2020

அ.தி.மு.க., 49ம் ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்.

 அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட்சியின், 49ம் ஆண்டு துவக்க விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார்.


விழாவை ஒட்டி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை சுற்றி, பச்சை நிறத்தில் மேடை அமைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அலுவலகம் அமைந்துள்ள, அவ்வை சண்முகம் சாலையில், கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. காலை முதல், கட்சியினர் குவிந்தனர். காலை, 9:30 மணிக்கு மேல், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் வந்தனர்.

 அ.தி.மு.க., 49ம் ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்


அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், ராஜேந்திரபாலாஜி, நிலோபர் கபீல், காமராஜ், உதயகுமார், எம்.சி.சம்பத், பாண்டியராஜன், மகளிர் அணி செயலர் விஜிலா சத்தியானந்த், மாநில இளைஞர் அணி இணை செயலர் சுனில், வழிகாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.காலை, 10:50 மணிக்கு, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வந்தார். அவரை கட்சியினர், நாதஸ்வரம், மேளதாளங்கள் ஒலிக்க, மலர் துாவி வரவேற்றனர். நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தனர்.

தொண்டர்கள், 'கட்சியின் காவல் தெய்வம் ஓ.பி.எஸ்.,' என, கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் துாவி பன்னீர் வணங்கினார். அதன்பின், அங்கிருந்த கொடிக்கம்பத்தில், கட்சிக் கொடியேற்றினார்.கட்சி தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி, மகிழ்ச்சி தெரிவித்தனர். கொடியேற்றி முடித்ததும், பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஓ..பி.எஸ்., இனிப்பு வழங்கினார்.

கட்சி அலுவலகம் உள்ளே, மாணவ --- மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவம் இறுதியாண்டு படிக்கும், 22 மாணவ - மாணவியர்; இரண்டாம் ஆண்டு படிக்கும், ஒரு மாணவி, பல் மருத்துவம் மற்றும் பொறியியல் இறுதியாண்டு படிக்கும், ஐந்து மாணவ - மாணவியர் என, மொத்தம், 28 பேருக்கு, 26.39 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, ஓ.பி.எஸ்., வழங்கினார்.

மாநிலம் முழுதும், அ.தி.மு.க.,வினர், கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, கட்சியின், 49ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர்.


எம்.எல்.ஏ.,க்கள் ‛மிஸ்சிங்'


கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., பங்கேற்கவில்லை. கட்சி அலுவலகம் முன், முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று பேனர் வைக்கப்படும். ஆனால், நேற்று பேனர் எதுவும் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.,க்களும் அதிகம் வரவில்லை. சென்னை மாவட்ட செயலர்கள் சிலரும் வரவில்லை.


சொந்த ஊரில் கொடியேற்றிய முதல்வர்


அ.தி.மு.க.,வின், 49ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சேலம் மாவட்டம், இடைப்பாடி, சிலுவம்பாளையத்தில், நேற்று காலை, கொடியேற்று விழா நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். பின், கட்சி கொடியை ஏற்றினார். தொடர்ந்து, அங்கிருந்த தொண்டர்களுக்கு, இனிப்பு வழங்கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


மீண்டும் அ.தி.மு.க., அரசுதுணை முதல்வர் விருப்பம்

அ.தி.மு.க., செய்திக்கான பாக்ஸ்அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் அறிக்கை:கட்சி மீது நம்பிக்கையுடன் இருந்தால், கட்சி தலைமை மீது விசுவாசத்துடன் இருந்தால், கடைக்கோடி தொண்டரும் கட்சியை வழிநடத்தும், ஒருங்கிணைப்பாளராக முடியும்; அரசுக்கு தலைமையேற்கும் முதல்வராக முடியும் என்று, உலகக்கு எடுத்துக்காட்டும் இயக்கமாக, அ.தி.மு.க., உள்ளது.

இன்று, நம் எண்ணங்களில் நிறைந்திருக்கும் சொல் வெற்றி. நாம் மேற்கொள்ள வேண்டிய செயல், வெற்றிக்கு பாடுபடும் உழைப்பு. ஜெ., அறிவுரையின்படி, மக்கள் பணி செய்ய, வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், கட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜெ.,வின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட, சுயநல சந்தர்ப்பவாத கும்பலிடம், தமிழகம் சிக்கி விடாமல் இருக்க, அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று, ஜெ., அரசு அமைந்திட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...