நமது வண்டிகளை திரையரங்குகள் பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் வண்டி தொலைந்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால் அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, October 21, 2020
சட்ட விழிப்புணர்வு .
இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர். அதன் பின்பாக, நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது. ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management. திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று கூறி விடுகின்றனர்.
திருடு போன காருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்து விடுகிறது. அதனை தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் ஹோட்டல் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நஷ்ட ஈடு கேட்டு மாநில நுகர்வோர் மன்றத்தில் வழக்கினை தொடுக்கின்றனர். மாநில நுகர்வோர் நீதிமன்றம் அவ்வழக்கில் ஹோட்டல் நிறுவனத்தினை ரூபாய் 2,80,000 நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவு இடுகிறது, அதனை எதிர்த்து ஹோட்டல் நிறுவனர் தேசிய நுகர்வோர் மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். அங்கும் மேற்கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு வருகிறது, வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் எப்பொழுது ஹோட்டல் நிறுவனம் தனது வாடிக்கையாளரிடம் இருந்து காரை பெற்று கொண்டு ரசீதை கொடுத்தார்களோ அப்பொழுதே நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் Bailment ஏற்பட்டு விட்டது. ஆகவே காரை பொறுப்புடன் திருப்பி கொடுக்க வேண்டிய கடமை நிறுவனத்திற்கு வந்து விட்டது. ரசீதில், குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுடைய கடமையில் இருந்து எவ்விதத்திலும் தப்பித்து கொள்ள முடியாது என்று கூறி வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டினை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
Taj Mahal Hotel vs. United India Insurance Company Ltd. (CIVIL APPEAL NO. 8611 OF 2019)
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment