Saturday, October 17, 2020

ஓடி வந்தவர்களுக்கு தான் பதவியா? தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குமுறல்!

 மாற்றுக் கட்சிகளில் இருந்து, ஓடி வந்தவர்களுக்கு, தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் வழங்கி வருவதால், நீண்ட காலமாக உழைத்து வரும் மூத்த நிர்வாகிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவுவது வாடிக்கை. கட்சி மாறுபவர்களுக்கு, புதிய கட்சியில் உடனே பதவிகள் கிடைக்காது. காலச் சூழ்நிலை, அரசியல் கணக்குகள் அடிப்படையிலேயே பதவி தரப்படும். ஆனால், தி.மு.க.,வில் சமீபகாலமாக, மாற்றுக் கட்சிகளில் இருந்து, ஓடி வந்தவர்களுக்கு, பதவிகள் வாரி வழங்கப்படுவதால், அதிருப்தி தொடர்கிறது.

ஓடி வந்தவர்களுக்கு தான் பதவியா?  தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குமுறல்!


தேனி மாவட்டத்தை, இரண்டாக பிரித்து,தெற்கு மாவட்டத்திற்கு, கம்பம் ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்டத்திற்கு தங்கதமிழ்செல்வனும், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.அம்மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய நிர்வாகிகளை ஓரங்கட்டி விட்டு, இரண்டு கட்சிகள் மாறி வந்தவர்களுக்கு பதவி அளித்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதுபோலவே, அ.தி.மு.க., மற்றும் தனிக்கட்சி என சென்று விட்டு, தற்போது, தி.மு.க.,வில் அடைக்கலமாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, தேர்தல் பணிக்குழு இணைச் செயலர் பதவி தரப்பட்டதையும், மூத்த நிர்வாகிகள் ரசிக்கவில்லை.

மேலும், தேர்தல் பணிக்குழு செயலர்களாக, முன்னாள் காங்., - எம்.எல்.ஏ., வேலுார் ஞானசேகரன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் டாக்டர் விஜய் மற்றும் பரணி கார்த்திகேயன் போன்றவர்களை நியமித்திருப்பதும், வேலுார் மாவட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள் மத்தியில், கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தேர்தல் பிரிவு நிர்வாகிகள் பதவியானது, மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் தானா என்ற கேள்வியை, அதிருப்தியாளர்கள் எழுப்புகின்றனர். பா.ஜ.,வில் இருந்து வந்த பி.டி.அரசகுமார், தி.மு.க., செய்தி தொடர்பாளராகவும், முன்னாள் எம்.எல்.ஏ., வேதரத்தினம், விவசாய அணி இணை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அ.தி.மு.க.,வில் இருந்து வந்த லட்சுமணன், தே.மு.தி.க.,விலிருந்து வந்த ஏ.ஜி.சம்பத் ஆகியோருக்கும் பதவிகள் என, நீண்டு கொண்டே செல்கின்றன.வாரிசுகளுக்கும், மாற்று கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும் மட்டும், இரண்டாம் கட்ட பதவிகளை வழங்குவது, தி.மு.க.,வில் எழுதப்படாத விதியாக உள்ளது.


இது குறித்து, மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:தனியார் கல்வி நிறுவனங்களில், பாதி இடங்கள், மதிப்பெண் அடிப்படையிலும், மீதி, நிர்வாக விருப்பத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும். தி.மு.க.,வில் எல்லா பதவிகளும், நிர்வாக விருப்பத்தின் அடிப்படையில் தான் வழங்கப் படுகின்றன.கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், மேலாளராக பணியாற்றுபவரின் பரிந்துரையில் தான், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட வாரியாக நியமிக்கப்படுகின்றனர். திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில், இந்த பிரச்னைகள் பூதாகரமாக வெடித்துள்ளன. இதன் பாதிப்பு, சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...