Monday, October 12, 2020

வி.ஐ.பி வரிசை உண்டா??விரைசா தள்ளி விட??????????

 ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.
நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.
நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழ்வோம்.
ஆக
நாம் நேசிப்பவர்களிடம் நம் நேசத்தை சொல்வோம்.
இயன்ற அளவு உதவி செய்வோம்,
யாரையும் கெடுக்காமல்
இருப்பதே பெரிய தர்மம்.
எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...
மகிழ்ச்சி யாக இருப்போம்.
வாழும் காலம் எவ்வளவு
என்பது முக்கியமல்ல,
அடுத்தவர்களை கெடுத்து முன்னேறி சாபம் பெறாமல்
அன்பையும், நேசத்தையும்
அனைவருக்கும் பகிர்ந்து
இறந்தாலும் வாழும்
உன்னதம் அடைவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...