Monday, October 26, 2020

இவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

 காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் இப்போதைய மிகபெரும் உதாரணம் கபில்தேவ்

அந்த "ஹரியான சிங்கம்" 1980களில் எப்படி இருந்தது? அது காட்டிய பாய்ச்சல் என்ன? பந்து வீசிய அழகென்ன? சிக்ஸர் அடித்த அந்த பலம் என்ன?
அந்த முகமும் கண்களும் காட்டிய தீர்க்கமென்ன? அந்த கைகளும் விரலும் செய்த மாயாஜலம் என்ன?
எப்படியெல்லாம் கொண்டாடபட்டார் அந்த கபில், 1980களில் அவரை கடக்காமல் யாரும் சென்றிருக்க முடியாது, இன்றிருக்கும் கிரிக்கெட்டர்களில் யாரும் அவர் அடைந்த புகழில் கால்வாசி கூட வரமுடியாது
இன்று மெலிந்துவிட்ட சிங்கமாக, ஒடுங்கிவிட்ட நதியாக‌ அவர் மருத்துவமனையில் இருப்பது மனதை ரணமாக்கும் காட்சி
எதுதான் இங்கு நிலையானது? எதுதான் அழியாதது? எதுதான் மாறாதது என்றால் எதுவுமில்லை
எல்லாம் மாயை, எல்லாம் கொஞ்ச காலம், எல்லாம் விதிக்கபட்ட காலம் மட்டும் என்பதன்றி எதுவும் இங்கு வேறெதுவும் நிலையானது இல்லை
"ஹரியான சிங்கம்" நலமாக திரும்ப
வாழ்த்துக்கள்
பிரார்த்தனைகள்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...