Thursday, October 15, 2020

முத்தையா_முரளிதரன்...

 பிரச்சனை என்னவெனில் முத்தையா முரளிதரன் இலங்கை மலையகத் தமிழர். அதாவது, பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டப் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய தமிழர் குடும்பம் அவருடையது. பெரும்பான்மையாக அத்தகைய குடும்பங்கள் இங்கேயிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலித் குடும்பங்கள் என்பதால், ஈழத்தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களை கண்டாலே பிடிக்காது. 'தோட்டிக்காரன், தோட்டக்காரன், கள்ளத்தோணி' என்றெல்லாம் மலையகத் தமிழர்களை இழிந்து பேசுவர் ஈழச்சாதித் தமிழர்கள். புலிகளின் ஈழ தேசியத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, மலையகத் தமிழர்களுக்கும் இடமில்லை. இதனால்தான் புலிகளை மலையகத் தமிழரும் ஏற்பதில்லை; முத்தையா முரளிதரன் என்னும் மலையகத் தமிழரும் ஏற்பதில்லை. மலையகத் தமிழர் என்றாலே இந்திய தமிழர்களில் தலித்துகள்தான் என்கிற கண்ணோட்டத்தில் இன்று முத்தையாவை எதிர்ப்பதாகவே படுகிறது. தலித்துகளுடன் வேறு சில சூத்திர சாதி தமிழர்களும் அன்று தேயிலைத் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதில் முத்தையா எந்த சமூகம் என்று நமக்குத் தெரியாது.

(மறவர் சமூகம் என்கிறார்கள்... சிலர் கொங்கு வேளாளர் என்கிறார்கள்...
அவர் மலர் மருத்துவமனையை சார்ந்த பெண்னைதான் திருமணம் செய்து இருக்கிறார் இந்த பெண்... நடிகர் சந்திரசேகரின் உறவினர் என்கிறார்கள்...
நடிகர் சந்திரசேகர் எப்படிப் பட்டவர் என்பது உலகம் அறியும்.
முத்தையா முரளிதரன்
கவுண்டனா, கள்ளனா என்பது முக்கியம் அல்ல
அவர் மலையக தமிழன்...
சிங்களவன் கொடுமையை விட,
ஈழத் தமிழா்களே இவா்களை மதிக்கவில்லையே.
தமிழகத்தை விட ஈழத்தில் சைவ வெள்ளாளா்களின் சாதி வெறி தீண்டாமை கொடுமை ஆதிக்கம் உள்ளது என்பதை
மறுக்க முடியாது..???
மலையக தமிழர்களை மனிதனாக மதிக்காத பல ஈழ தமிழர்கள் சுய சாதி பெருமை பேசுபவர்கள் பலர் இன்றும் கூட உண்டு... அகதிகளாக சென்று இன்று பலர் குடியுரிமை பெற்றும் சாதி பெருமை பேசுபவர்கள் பலர் இன்றும் உள்ளனர். இவர்களுக்கு தமிழ் இசுலாமியர்... மலையக தமிழர்...இவர்களை சக மனிதர்களாக பார்க்காத ஈழ தமிழர்கள் பலர் உண்டு.)
ஆனாலும் அவர் மலையகத் தமிழர் என வருவதால் '"வார்டன்னா அடிப்போம்'" என்பது போல மலையகத் தமிழன்னா தலித்துதான் என பார்க்கிறார் களோ என்னவோ...
ஆனால், முத்தையா மீதான வன்மத்திற்கு பின்னால் இந்த சாதி யூகம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...