Sunday, December 13, 2020

திமுகவின்_கயிறு #பிரசாந்த்_கிஷோரின்_கையில்...

 24 MP

89 MLA
50 வருட கால ஒரு பெரிய இயக்கம்
கிராமம் வரை அடித்தள கட்டமைப்பு,
#இருந்தும் வடநாட்டவர் பிரசாந்த் கிஷோரை வேலைக்கு வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது என்றால் உண்மையிலேயே திமுக பயந்துதான் விட்டது...
ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி இவர்கள் காங்கிரஸிலிருந்து பிரிந்து பின் புது இயக்கம் கண்டு பிரசாந்த் கிஷோரின் மாதிரியான கார்ப்பரேட் அரசியல் உதவி நிறுவனங்களை கையில் வைத்து காய் நகர்த்தி வெற்றி பெற்றார்கள் என்றால் அது வேறு.. அவர்கள் ஜெயிக்கும் வரை இப்படியான அரசியல் கார்ப்பரேட் நிறுவனம் இவர்களுக்கு உதவுகிறது என்று அந்த கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கே தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை...
ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற அறிஞர் அண்ணாவின் கொள்கையின் வழியிலும் முத்தமிழ் வித்தகர் என்று சொல்கிற கலைஞர் கருணாநிதி பள்ளியிலும் உணர்வுப்பூர்வமான தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவிலும் இருந்த #திமுக தற்போது ஒரு வடநாட்டவர் கார்ப்பரேட் நிறுவனத்தை வைத்து 2021 ல் ஆட்சியை பிடித்து விடலாம் என்றால் ஸ்டாலினின் வலிமையின்மையையே காட்டுகிறது...
வாங்கிய 380 கோடிக்கு பிரசாந்த் கிஷோரால் ஸ்டாலினின் முடி அலங்காரத்தையும் சமூகவலைத்தளத்திலும் மாற்றம் செய்ய முடிந்ததே தவிர ஸ்டாலின் தத்தி தத்தி பேசுவதையோ மக்களின் மனதையோ இப்போதுவரை மாற்ற முடியவில்லையே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...