நடிகர்திலகம் நம்மை விட்டு மறைந்தபோது தினத்தந்தியில் வந்துகொண்டிருந்த ஒரு தொடரில் கௌரவம் படத்தின் ஒளிப்பதிவாளர் (திரு வின்சென்ட் ?) அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்:
"கௌரவம் படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை பார்த்த நடிகர் திலீப்குமார் தமிழில் ஒளிப்பதிவு செய்தவரே இந்தியிலும் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார்.மேலும் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் என்னை கேட்டுக்கொன்டார்.அதன்படி ஒரு நாள் நான் அவரை போய் சந்தித்தபோது படத்தில் வயதான சிவாஜி இள வயது சிவாஜியை விட சற்று உயரமாக தெரிகிறார் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார்.அதற்கு நான் "இதில் கேமரா டெக்னிக் எதுவும் இல்லை,வயதான கேரக்டருக்கான மேக்கப்பை போடும்போதே சிவாஜி அவர்களுக்கு அந்த ரோலுக்குன்டான கம்பீரம்,அரோகன்ஸ்,பாடி லாங்குவேஜ் எல்லாமே வந்துவிடும்,தானாகவே நெஞ்சம் நிமிர்ந்து கொள்ளும்,அதனால்தான் அவர் உயரமாக தெரிகிறார்.ஆனால் கண்ணன் ரோலுக்கான மேக்கப்பை போடும்போது அதற்க்கு தேவையானபடி அந்த பணிவு,கூச்சம் எல்லாம் சேர்ந்து அவரை இயல்பாக காட்டியிருக்கும்" என்று சொன்னேன்.இதை கேட்டு பிரமித்து போன திலீப்குமார் அவர்கள் "அந்த உயர வித்தியாசத்துக்கு தாங்கள் கேமரா டெக்னிக்கைத்தான் பயன்படுத்தியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் நடிப்பிலேயே அந்த் வித்தியாசத்தை கான்பிக்க சிவாஜி ஒருவரால்தான் முடியும் வேறு எவராலும் முடியாது,நான் எதற்க்கும் ஒரு முறை யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.ஆனால் சில நாட்களுக்கு பிறகு அந்த படத்தையே கைவிட்டுவிட்டார்".
No comments:
Post a Comment