Friday, December 11, 2020

******* நீதிதேவன் சனீஸ்வரபகவான் ********

 *சனீஸ்வரபகவான் கர்ம காரகனாக, நீதிபகவானாக ஆயுள்காரனாக நியமிக்கப்பட்டுள்ளார்

*ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி கண்டகசனி என வரும்போது அஞ்சி நடுங்க வேண்டாம் அவரவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக செய்யும் தவறுகளுக்கு தக்க தண்டனையை ஏழரைச் சனி காலத்தில் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
*சனீஸ்வரபகவானின் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
*சனீஸ்வரபகவானுக்கு செய்ய வேண்டிய மிகவும் எளிய பரிகாரங்கள்...
*தினசரி வீட்டில் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம்
*வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவும்.
*தினசரி சனீஸ்வரபகவானின் வாகனமான காக்கைக்கு உணவளிக்கவும்.
*மகாவிஷ்ணுவின் அம்சமான வலம்புரி சங்கு, சாளக்கிராமத்தை வழிபடவும்.
*கஷ்டப்பட்டு வெயிலில் பணிபுரியும் உழைப்பாளிகளுக்கு காலணி தானம் செய்யலாம்.
* பெண்ணாசையையும், மண்ணாசையும் கொண்டு அலைபவர்கள் சனீஸ்வரபகவானின் கோபத்திற்கு ஆளாகி அதிகளவு பாதிப்புகளை சந்திப்பார்கள்
* மனத்தூய்மை மிகவும் முக்கியமானது
* வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை கெடுக்கும் & பழிவாங்கும் எண்ணத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
*கெட்ட வார்த்தைகள், அமங்கல சொற்களை பேசுதல், காமஉணர்வை தூண்டக்கூடிய படங்களை பார்த்தல் கூடாது.
*துளசி மாலை, வன்னி மணி மாலை, ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களுக்கு சனீஸ்வரபகவானின் தாக்கம் பாதிப்பதில்லை.
*அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று சடாரி வைத்துக் கொள்வதால் சனீஸ்வரபகவானின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்
* திருநள்ளாறு, திருக்கொள்ளிகாடு, குச்சனூர் ஏரிக்குப்பம் சென்று சனீஸ்வரபகவானை வணங்கி வந்தால் நம் மனக்கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி விடும்
*சனீஸ்வரபகவானின் குருவான காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகாலபைரவரை வணங்கி வந்தால் துன்பங்கள் குறைந்து இன்பங்கள் அதிகரிக்கும் *ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*
Image may contain: 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...