Friday, December 11, 2020

மின் இணைப்பு பெயர் மாற்றம்.

 வணக்கம் நண்பர்களே...!

மின் இணைப்பு பெயர் மாற்றம்
கூடுதல் ஆவணம் கேட்க கூடாது...!
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, கூடுதல் ஆவணம் கேட்டு, நுகர்வோரை அலைக்கழிக்கக் கூடாது' என, பிரிவு அலுவலகத்தினரை அறிவுறுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களிடம், மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பு, சொத்து விற்பனை, வாரிசு அடிப்படையில், வேறு நபருக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, மின் இணைப்பு பெற்றுள்ள நபர் இறந்து விட்டால், அவரின் வாரிசுதாரர், தன் பெயருக்கு இணைப்பை மாற்ற விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன், வாரிசு சான்று நகல்; மற்ற வாரிசுகளின் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சொத்து விற்பனையின் போது, பெயர் மாற்றம் செய்ய, புதிய உரிமையாளரின் சொத்து பத்திர நகல்; பழைய உரிமையாளர், மின் இணைப்பிற்கு செலுத்திய வைப்பு தொகையை, புதிய உரிமையாளருக்கு மாற்றி தரும் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பல அலுவலகங்களில், பெயர் மாற்றம் செய்ய கூடுதல் ஆவணம் கேட்டு, அலைக்கழிக்கப் படுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, எந்தெந்த ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதி வகுத்துள்ளது.
அதை தவிர, பிரிவு அலுவலகங்களில், கூடுதல் ஆவணம் கேட்பதாக, ஆணையத்திற்கு அதிக புகார்கள் சென்றுள்ளன.
எனவே, பெயர் மாற்றத்திற்கு கூடுதல் ஆவணங்களை கேட்டு, நுகர்வோரை அலைக்கழிக்க கூடாது என, பிரிவு அலுவலக பொறியாளர்களை அறிவுறுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...