Saturday, June 5, 2021

" காழ்ப்புணர்ச்சி "

 

#1969லேயே கருணாநிதியின்_காழ்ப்புண‌ர்ச்சி அர‌சிய‌லும், மக்கள் திலகத்தின் நெற்றிய‌டியும்..
ஜெயலலிதாவிடம் பிடிக்காதது
அவரின் "காழ்ப்புணர்ச்சி அரசியல்"- விகடனில் கருணாநிதி ஒரு பேட்டியில் கூறுகிறார். இது இருக்க‌ட்டும்..க‌ருணாவின் காழ்ப்புண‌ர்ச்சியை பாருங்க‌ள்..
1965ல் மெல்லிசை மன்னர்
திரைத் துறையில் உச்ச நிலையில் கோலோச்சிய காலக் கட்டம் ....
மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் மாறி மாறி படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த காலக் கட்டம் , எப்பொழுதும் பிசி ...
அந்த சமயத்தில் தான் கருணாநிதி கொடுத்தனுப்பியதாக ஒரு காகிதத்தை கொண்டு வந்து எம் எஸ் விஸ்வநாதனிடம் கருணாநிதியின் அடிப்பொடியான அமிர்தம் நீட்டினார் ....
வழக்கம் போல அது கருணாநிதியின் கிறுக்கல் , அதற்கு இசையமைக்க வேண்டும் என்று நெருக்கடி , மெல்லிசை மன்னர் அப்பொழுது ஏகமாக வேலை பளுவில் இருந்த காரணத்தால் , இது போன்ற வரிகளுக்கு எல்லாம் தன்னால் உடனே பாட்டிசைக்க முடியாது என்று மறுத்துவிட்டார் ...
வரிகள் பாடல் அமைக்கும் விதமாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார் ....
அத்துடன் அந்த சம்பவம் நிறைவு பெற்றதாகவே மெல்லிசை மன்னரும் நினைத்தார் .
நாட்கள் உருண்டோடியது ....
பேரறிஞர் அண்ணா அவர்கள்
பிப்ரவரி 3 1969 ம் ஆண்டு மறைந்தார் , அடுத்து முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்வு செய்யப் பட்டு முதல்வராக பொறுப்பேற்றது எல்லாம் நமக்குத் தெரியும் ,
அண்ணாவின் மறைவை ஒட்டி கருணாநிதி பதவியேற்றதால் , அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் கொண்டாட்டத்துடன் நடக்கவில்லை என்பதால் . மார்ச் மாதம் கருணாநிதியை பாராட்டி ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர் .
விழாவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் கச்சேரியும் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக
சொன்னதால் , அதற்கு ஒப்புக் கொண்டு , கச்சேரிக்கான ஒத்திகையில் எம் எஸ் விஸ்வநாதன் ஈடுபட்டிருந்த பொழுது ,
ஒரு அதிகாரி அவரிடம் வந்து ஒரு காகிதத்தை நீட்டுகிறார் . என்ன என்று அதைப் பார்த்த பொழுது , பல வருடங்களுக்கு முன்னர் அமிர்தம் தன்னிடம் நீட்டிய அதே காகிதம் தான் என்பது புரிந்தது எம் எஸ் விஸ்வநாதனுக்கு ...
முதல்வர் விரும்புகிறார் , இதற்கு
நீங்கள் இசையமைத்து கச்சேரியில் பாடவேண்டும் என்று அதிகாரி சொல்லிவிட ... வேறு வழியில்லாமல் அந்த வரிகளுக்கு இசையும் அமைத்து கச்சேரியும் நடக்கிறது ...
கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார் , மேடையில் மக்கள் திலகம் உட்பட அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் , கீழே முன் வரிசையில் எம் எஸ் விஸ்வநாதன் ... காலமெல்லாம் பழிவாங்கும் புத்தியை பிறவிக் குணமாக சுமக்கும் கருணாநிதி , அப்பொழுது சொல்கிறார் ,
" எம் எஸ் விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர் , எனது எழுத்துக்கு பாட்டிசைக்க அவருக்கு நேரமிருக்காது , ஆனால் அவரையே இங்கே
வரவழைத்து விடும் அளவிற்கு நான் உயர்ந்திருக்கிறேன் " என்று ....
எம் எஸ் விஸ்வநாதன் கூனிக் குறுகிப் போகிறார் .... மேடையில் இருந்த மக்கள் திலகம் இதை கவனித்து விட ... இறுதியாக மைக்கை பிடிக்கிறார் ...
மக்கள் திலகம் பேசியது ....
" மெல்லிசை மன்னர் அருமையாக கச்சேரி அரங்கேற்றினார் ... அவர் மாமேதை , எப்படிப் பட்டவர் என்றால் , யாருடைய கிறுக்கலாக இருந்தாலும் எந்தக் குப்பையாக இருந்தாலும் அதற்கு அவர் இசையமைத்து விடுவார் " என்று சொல்ல , அரங்கமே அதிர்ந்தது கை தட்டலில் ....
கருணாநிதி முகத்தில் ஈ
ஆடவில்லை ...
இவர் காழ்ப்புணர்ச்சி குறித்து
பேசுகிறாா்.
."குப்பை எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் குப்பை குப்பைதான்"
*கோபுரம் என்றும் கோபுரம் தான்*
*#உண்மையை எங்கும் பேசி நடந்து காட்டி, வாழ்ந்து, ஆட்சி புரிந்த புரட்சி தலைவர் அவர்களின் தொண்டர்களில் ஒருவனாக இருப்பதே #பெருமை#
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...