Thursday, June 10, 2021

பித்ரு தர்ப்பணம் .

 இன்று அமாவாசை. பெரும்பாலான ஹிந்துக்கள் நீத்தார் கடன் ( பித்ரு தர்ப்பணம் ) செய்யும் நாள். திருவள்ளுவரும்

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." என்று தெய்வத்தைக்காட்டிலும் நீத்தாருக்கு முதன்மை கொடுத்துள்ளார்.
அமவாசை தர்ப்பணம் முடிக்கும் பொழுது கடைசியாககூறும் மந்திரங்கள் மிக சிறப்பானவை"ஏஷாம் ந மாதா ந பிதா.." என்ற மந்திரங்களின் கருத்து" யார் யாருக்கு தாய் , தந்தை, சகோதரர்,உற்றார், உறவினர்,இல்லையோ அவர்கள் எந்த கோத்திரம் எந்த குலத்தவரானாலும் அவர்கள் அனைவருக்கும் நான் அளிக்கின்ற இந்த எள்ளும் தண்ணீரும் சென்று அவர்கள் திருப்தி அடையட்டும் , திருப்தி அடையட்டும் திருப்தி அடையட்டும்"
நான் அமாவாசை மற்றும், மாத தர்ப்பணம் செய்யும் நேரத்தில் இந்த கடைசி மந்திரங்களை உச்சரிக்கையில் பொதுவாக நமக்கு தெரிந்த மறைந்தவர்களை நினைத்துக்கொள்வதுண்டு.
ஆனால் இன்று என்னையறியாமலேயே இந்த கொரோனா கொடிய நோயால் இறந்து , உறவினர் யாரும் பார்க்க கூட முடியாமல்,எந்த சம்ஸ்காரமும் இல்லாமால் இவ்வுலகை நீத்த அனைவரையும் உளமாற நினைத்து அந்த ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டினேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...