Thursday, June 10, 2021

கொடுத்து உதவுங்கள்!!

 ஒரு கூக்கிராமத்தை நோக்கி பண்டிதர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்த பண்டிதர்,ஐயா இந்த ஊரில் சிதம்பரம் பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர் மேலே போய் சேர்ந்துட்டார் என்று பதில் வந்தது.அது சரி அவரை பற்றி ஏன் கேட்டீர்கள்,என்று வண்டிக்காரன் கேட்டார்.அதற்கு அந்த பண்டிதர் தன் கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஏழையாக பிறந்த எமக்கு படிக்க பணம் கொடுத்த வள்ளல் அவர்.அதனால் தான் எமக்கு இந்த வாழ்கை கிடைத்தது,என்று கூறி அழுதுவிட்டார்.

ஊர் வந்தவுடன் கீழே இறங்கி பேசிய வாடகையை எடுத்து நீட்டினார் அந்த பண்டிதர்.உடனே அந்த வண்டிக்காரன் பணம் வேண்டாம் என்று கூறி புறப்பட தயாரானான்.
அதற்கு அந்த பண்டிதர், ஏன் வேண்டாம்,எதற்கு வேண்டாம் என்று கேட்டார் . அதற்கு அவர் ஐயா நீங்கள் கேட்ட சிதம்பரம் பிள்ளை பரம்பரை தாங்க நாங்க.இப்போ நொடிஞ்சு ஏழையாய் போய்ட்டோம்.மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க ஐயா எங்களுக்கு சோறு போடுது.ஆனாலும் எங்க ஐயா கொடுத்து வளர்ந்தவக நீங்க உங்ககிட்ட கூலி வாங்கினா கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குத்தம் வருமுங்க நாங்க கொடுத்த இடத்தில் வாங்குறது இல்லைங்க என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தார் அந்த வண்டிகார பெருந்தகை.
இருக்கும் போது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்!!
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...