இந்திய அரசியலில் முதல் முறையாக "தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவில்" திருநங்கையான டாக்டர் " நர்த்தகி நட்ராஜ் நியமனம்"
ஆம், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக முனைவர் நர்த்தகி நடராஜ்-ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் பல உயரங்களை அடைந்தவர்.
சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.
தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ்அன்று உடலளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் ஏராளமான ஏளனங்களை அந்தசின்ன வயசிலேயே சந்தித்து முடித்துவிட்டார் நடராஜ்.
கிடைத்த வசவு சொற்களை எல்லாம் பாராட்டுக்களாக மாற்ற முயன்றார். வழியெல்லாம் பாதத்தில் பட்டு கிழிக்கும் முள்பாதைகளை முல்லைப்பூ விரிப்பாக மாற்றியவர்.
நிறைய முதன்மைக்கு சொந்தக்காரர் நர்த்தகி நடராஜ்.
முதல் டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை,
முதல் பாஸ்போர்ட் பெற்ற திருநங்கை,
முதல் தேசிய விருது பெற்ற திருநங்கை,
முதல் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை என்ற பெருமைகளை தக்க வைத்து கொண்டுள்ள நர்த்தகி நடராஜ்-க்கு
இன்று , தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழு உறுப்பினர் இன்னும் பல முதன்மைகள் கிடைக்க வாழ்த்துகிறோம்...
No comments:
Post a Comment