1. 25% கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களே கொள்முதல் செய்துகொள்ளும் நடைமுறை விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஓரிரெண்டு வாரங்களில் மொத்த தடுப்பூசிகளும் மத்திய அரசாலேயே கொள்முதல் செய்யப்பட்டு மா நிலங்களின் தேவைக்கேற்ப, இலவசமாக வினியோகம் செய்யப்படும்.
2. இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள், தனியார் மருத்துவமனையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான நடைமுறைகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து செயல்படுத்த வேண்டும்.
3. மொத்த தடுப்பூசி உற்பத்தியிலிருந்து 75% மத்திய அரசு கொள்முதல் செய்யும். 25% தனியாருக்கு வழங்கப்படும். மாநிலங்களுக்கான தடுப்பூசிகள் 75% பகுதியிலிருந்து வழங்கப்படும்.
4. கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகளையும் தவறான கருத்துக்களையும் வெளியிடுவதைத் தவிர்த்து அனைவரும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.
5. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் படி ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவு தானியங்கள், தீபாவளிவரை வழங்கப்படும்.
விபரமான மொழிபெயர்ப்பை எழுத முயல்வேன். இப்போதைக்கு பிரதமர் உரையின் சாரத்தை மட்டுமே தந்திருக்கிறேன்.
ஜெய் ஹிந்த்..! 




No comments:
Post a Comment