மிகவும் இதயத்தைத் தொடும் செய்தி
ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்து கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
அவர் தனது மகனைத் தோள்களில் அமர்த்தியிருந்தார்.
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக் கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்துப் பாராட்டினர்.
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்.
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், "இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?" என்று...
அனைவரும் ஒரே குரலில்“ஆம், ஆம், உங்களால் முடியும் ..” என்று கத்தினார்கள் .
"நீங்கள் என்னை நம்புகிறீர்களா", என்று அவர் கேட்டார். அவர்கள் ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்துப் பந்தயம் கட்டத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
அவர் சொன்னார்"சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?" என்று .
"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"
திகைப்பான மௌனம் நிலவியது.
ஒவ்வொருவரும் அமைதியாகி விட்டார்கள்.
நம்பிக்கை வேறு.
சரணாகதி வேறு.
சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்.
இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.
நாம் கடவுளை நம்புகிறோம்.
ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?
மிக அழகான செய்தி, மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தகுந்தது!
சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
No comments:
Post a Comment