ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடிப்பது போல 10 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கப் பார்க்கிறது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் விலங்குகளின் நல அமைப்பு என்று தன்னை அழைத்துக் கொள்ளும். கிறிஸ்தவ பீட்டா நிறுவனம்.
கடந்தவாரம் இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு ஸ்தாபனமான குஜராத்தில் இருந்து செயல்படும் 10லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அமுல் நிறுவனத்திற்கு கிறிஸ்தவ பீட்டா "இனிமேல் பசும் பாலை கொள்முதல் செய்வதை விட்டுவிட்டு வீகன் பால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. வீகன் பால் என்பது சோயா, பாதாம் போன்ற தாவர வித்துக்களில் இருந்து பெறப்படுகின்ற பால்.
இது தொடர்பாக இந்தியா முழுவதும் கடும் எதிர்வினைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அமுல் நிறுவனத்தின் துணைத்தலைவர் வலம்ஜி ஹம்பால் பிரதமர் மோடியிடம் கிறிஸ்தவ பீட்டாவை தடை செய்யக் கோரிஉள்ளார்.
கன்றுக்கான பாலை கரந்து விடுவதால் அவை பாதிக்கப்படுவதாகவும், ஹார்மோன் ஊசிகள் செலுத்தி கால்நடைகளுக்கும், அவற்றின் பாலை உண்ணும் மனிதர்களுக்கும் கேடு விளைவிப்பதாகவும், விலங்குகளின் பால் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகவும் ஆனால் சோயா மற்றும் இதர தாவர வகை பால்களில் கொழுப்பு, சர்க்கரை இரண்டும் குறைவாக உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கும் அலர்ஜிகளில் இதிலிருந்து விடுபடுவதற்கும் வீகன் பால் சிறந்தது என்பது கிறிஸ்தவ பீட்டாவின் வாதம்.
மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல முட்டாள்தனமான கோரிக்கைகளை முன்வைக்கும் கிறிஸ்தவ பீட்டாவுக்கு தெரியாதா பால் உற்பத்தி இல்லை என்றால் பாலுக்காக வளர்க்கப்படும் கோடிக்கணக்கான கால்நடைகள் அழிந்து போகும் என்பது?
வயிறு முட்ட தின்று விட்டு பொழுது போகாமல் விலங்குகளின் நலம் பற்றி பேசித்திரியும் கிறிஸ்தவ பீட்டாவின் 65 லட்சம் ஆதரவாளர்களை விடவும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மீது கூடுதலான பற்று கொண்டவர்கள் நம் விவசாயிகள்.
கிறிஸ்தவ பீட்சாவின் அடிப்படை நோக்கமே ஆபத்தமானது. வளரும் நாடுகளில் பொருளியல் சுய சார்பு தன்மையையும், பாரம்பரிய உணவு உற்பத்தி முறையையும் ஒழித்துக் கட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைக்கும் கொடூரமான ஒரு செயல் தந்திரத்தை, விலங்குகளின் நலன் என்ற பெயரில் நளினமாக நுழைக்க பார்க்கிறது கிறிஸ்தவ பீட்டா. அமெரிக்காவில் தனி சட்டம் இயற்ற சொல்லி ஆண்டுக்கு ஏறத்தாழ 35 ஆயிரம் லாபமில்லா விலங்குகளுக்கு மேற்பட்டவைகளை கருணைக் கொலை புரியும் இந்த கிறுக்கு கிறிஸ்தவ பீட்டா தான், லாப நோக்கமற்ற நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு ஆண்டுக்கு சுமார் 50.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் இந்த கிறிஸ்தவ பீட்டா தான், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கண்ணீர் வடித்தது. நாட்டு நாய்களின் இனப்பெருக்க மையம் சுகாதாரம் இல்லை என்று கூறி அவற்றை அவற்றுக்கு மூடு விழா நடத்தியது.
இன்றைய சூழலுக்கு தகுந்தாற்போல் தன்னுடைய வலையை இன்னும் இன்னும் விஸ்தரிப்பு செய்து கொண்டேபோகும் கிறிஸ்தவ பீட்டா, இந்தியாவின் இறையாண்மையின் மடியில் கை வைக்கும் வேலையை துணிந்து செய்கிறது.
அமுல்,பால் உற்பத்தியில் ஒரு முன்னோடி நிறுவனம். இதைப் போன்று தான் தமிழகத்தில் ஆவினும் கர்நாடகத்தில் நந்தினியும். இன்னும் பல மாநிலங்களில் பல பெயர்களில் கூட்டுறவு பால் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அமுலைக் கட்டுப்படுத்தினால் இந்தியாவின் பால் சந்தையைக் கைப்பற்றி விடலாம் என்பது கிறிஸ்தவ பீட்டாவின் எண்ணம்.
விவசாயம்,வகை கெட்டுப்போன பின்னால் ஏறத்தாழ 40 லட்சம் குடும்பங்கள் தமிழகத்தில் பாலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே தீவனங்களின் விலை உயர்வும், தனியார் பால் நிறுவனங்களின் லாப வேட்கையும், பால் உற்பத்தியாளர்களின் வயிற்றை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில்தான் கிறிஸ்தவ பீட்டாவின் செயல்பாடு இருக்கிறது.
பால் என்பது உற்பத்தியாளர்களின் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல அது அவர்களின் உணவு சார்ந்ததும் கூட. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் சொந்த பயன்பாடு மற்றும் உள்ளூர் பயன்பாட்டுக்காக மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் நுகர்வாக கொள்ளப்படுகிறது. பால் என்பது நமது உணவு கலாச்சாரத்தோடு ஊறிப்போன ஒன்று.
இந்த கலாச்சார கட்டமைப்பை உடைத்துவிட்டு வீகன் பாலை கொண்டுவரத்துடிக்கும் கிறிஸ்தவ பீட்சாவின் நோக்கத்தை முறியடிப்போம்.
அதை இந்தியாவில் இருந்து விரட்டியடிக்க வேண்டுமென்ற முழக்கத்தை முன்னெடுப்போம்.
No comments:
Post a Comment