சிலர் நம்மிடம் கேட்பது திமுக ஆட்சிக்கு வந்து சில வாரங்கள்தானே ஆகிறது அதற்குள் விமர்சனம் என்பது சரியா என்பது?
இது இன்னும் சிலருக்கு சரி என்றே தோன்றும்!
திமுக திருந்திவிட்டது என்று நம்ப சில நடவடிக்கைகளை எதிர்பார்த்தேன். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர்களின் கீழ்தரமான ஏமாற்றும் நடவடிக்கைகள் அவர்கள் திருந்தவும் இல்ல, திருந்த போவதும் இல்லை என்று நிரூபித்தன!
அவற்றில் மிக மோசமான ஒன்று தங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக கொரானா ஊரெல்லாம பரவி ஆளும் கட்சியின் மீது கோபம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசிக்கு எதிரான கேவலமான அரசியல் ஒன்று போதும்...
இருந்தாலும் அது சரி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்க்காக செய்த கீழ்தரமான அரசியல் என்றே வைத்துக்கொள்வோம்.. ஆட்சிக்கு வந்தபின் மாறிவிட்டார்களா?
அதை சொல்ல வைக்க சில ஆட்சியின் நல்ல நாலு குணாதியங்களை எதிர்பார்த்தேன். அது அவர்களின் மோசமான கடந்த காலத்தை மாற்றும் என்பதற்கான அறிகுறியாக அதை நான் எதிர்பார்த்தேன். அவற்றில் சில முக்கியமானவைகளை பார்ப்போம்.
1) சட்டம் ஒழுங்கு: இதை சீர் செய்ய வேண்டும் என்றால் அதை செய்யும் போலீஸ்காரர்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அது கட்சிக்காரனுக்கு கொஞ்சம் கருணை காட்டலாம், ஆனால் அவன் கையில் அதிகாரத்தை கொடுப்பது என்பதைவிட கட்சிக்காரர்கள் கையில் எடுப்பதை போலீஸ் அனுமதிக்க வேண்டிய கட்டாயம். அதை தடுக்கவேண்டிய முதல்வர், முயற்சிக்கக்கூட இல்லை!
2) ஆட்சிக்கு வந்தபின் தனக்கு ஓட்டு போட்டவனுக்கு ஒரு சட்டமும், போடாதவனுக்கு ஒரு சட்டமும் கொண்டு அரசாலுமேயானால் அந்த அரசு உறுப்படவே உறுப்படாது! ஆட்சிக்கு வந்தவுடன் சூழ்நிலை ஒரு ஸ்டிர்க்டான லாக்டவுன் தேவைப்பட்டதும் அதையும் போட்டார்கள், ஆனால் அந்த வாரத்தில் சிறுபான்மையினர் பண்டிகைக்காக லாக்டவான் போட்டாலும் அவர்களுக்காக என்று சலுகை அரசின் முதல் லாக்டவுனையே கேலிக்கூத்தாக்கியது. முதல் கோணல் முற்றிலும் கோணல்.
3) ஒரு அரசு தவறு நடந்துவிட்டால் மூடி மறைக்க முயற்சிக்கும். அது பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். ஆனால் ஒரு அரசு அதை செய்வதற்கு முன்பே இது சரியாக போகாது, மக்கள் எதிர்ப்பார்கள் என்ற எண்ணத்தோடு அதை மூடி மறைக்க முயலுமேயானால் அந்த அரசால் எதுவும், எதையும் உறுப்படியாக செய்ய முடியாது.. இந்த அரசு செய்யும் தவறுகளை மூடி மறைக்க மீடியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர் ஆக்கி அவர்களுக்கு மாசம் ₹5000 கொடுத்ததன் நோக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போல பறை சாற்றியது.
4) ஒரு அரசின் தலைமை அறிவோடு, திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது அரசாங்கத்தில் திறமையுள்ளவர்களை வைத்து வேலை வாங்கும் திறமையாவது இருக்கவேண்டும். எதுவுமே இல்லாத பட்சத்தில், நம்பத்தகுந்த அறிவாளியை நியமித்த, சொல்படி கேட்கவேண்டும். ஆனால் இங்கே சொல் புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை எனும்போது இந்த அரசு எல்லார் சொல்வதையும் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். ஆளானது.
இன்னும் பல விஷயங்களை சொல்லலாம், ஆனால் இந்த நான்கு போதும் இந்த அரசு ஒரு கைலாகாத அரசு என்று கணக்கிட..
இந்த நான்கையும் நேற்று அல்ல நாளை செய்தால் கூட நம்பலாம். ஆனால் செய்யாது என்று நம்பிக்கை எனக்குள்ளது.
மேலும் எப்படி இந்த அரசு நடக்கும், நடக்கப்போகிறது, காலத்தை கடத்தப்போகிறது என்பதை யூகிக்க ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் தெரிந்திருக்க வேண்டியதில்லை. கொஞ்சம் மற்றவர்கள் நிலையில் இருந்து பாபார்க்கும் அறிவு போதும்?!?
இந்த அரசு ஒவ்வொரு செயல்களையும் மூடி மறைக்க ஒரு நாநாடகத்தை மீடியா மூலம் செய்து மக்களை திசை திருப்பும். தற்போதைய எடுத்துக்காட்டு கிஷோர் சாமி கைது டாஸ்மாக்கை மறைக்க.. ஏனெனில் இந்த அரசின்மீது மக்கள வைத்திருக்கும் நம்பிக்கையைவிட தன்னம்பிக்கை என்பது மிகக்குறைவு என்பதைவிட இல்லை என்று சொல்வதே சால்ச்சிறந்தது, பொருத்தமானது.
அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால் சுடுகாடு, இது திராவிடத்தின் விஷன், மிஷன்! இப்போது தனி நாட்டுக்கு வாய்ப்பே இல்லை எனும்போது, சுடுகாட்டுக்கு வாய்ப்புகள் ஏராளம்! அதனால்தான் சுடலை எனும்பெயர் பொருத்தம் ஆச்சர்யம் அதுவே எதிர்பார்ப்பு!
No comments:
Post a Comment