Thursday, June 17, 2021

கமிஷனுக்காக என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்து விடக் கூடும்!

 அன்புமிக்க தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களுக்கு,

நீங்கள், கீழ்க்கண்ட மலைக் கோவில்களுக்கு , “ஏற்றப்பொறி ( Rope car/ winch )” அமைக்கப் போவதாக சமீபத்தில் சொல்லி இருக்கிறீர்கள்:
1. சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோவில்;
2. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்;
3. திருத்தணிகை ஸ்ரீ முருகன் கோவில் ;
4. திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில்;
5. திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணஸ்வாமி கோவில்
நன்றி!
இங்கெல்லாம் “ஏற்றப்பொறி” அமைக்கும் போது, இதில் நல்ல அனுபவம் உள்ள- உலகில் தலை சிறந்த- பொறியியல் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை உங்கள் மேற்பார்வையில் விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன். அற நிலையத் துறை அதிகாரிகளில் கை சுத்தம் யாருக்காவது இருக்கிறதா எனத் தெரிய வில்லை. எனவே அவர்களிடம் விட்டால், கமிஷனுக்காக என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்து விடக் கூடும்! நீங்கள் ஹிந்துக் கோவில்கள் பால் மிகுந்த அக்கறை காட்டுவதால், இதனை நான் உங்களிடம் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
மெட்ராஸ் உயர் நீதி மன்றம், ஹிந்துக் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கிறது. எனக்குக் கிடைத்துள்ள ஒரு தகவலை உங்களுக்கு சொல்லுகிறேன்:
சென்னையில் இருந்து பங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில் “பாப்பான் சத்திரம்” என்னும் ஊர் இருக்கிறது. இங்கு மிகவும் புராதனமான, ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவில்கள், அற நிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் எந்த விதப் பாராமரிப்பும், பாதுகாப்பும், இன்றி இருக்கின்றன.
100 வருஷங்களுக்கு முன்பு, வெங்கையா என்னும் ஜமீந்தார், பூந்தமல்லி தாண்டி உள்ள குத்தம்பாக்கத்தில், 1000 ஏக்கர் நிலங்களுக்கும் மேலான நிலத்தை இக்கோவில்களுக்கு தானமாக வழங்கி உள்ளார். அதில் தமிழக அரசு 800 ஏக்கர்களுக்கும் மேலாக விரிவாக்கப் பணிகளுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கோவிலுக்கு இழப்பீட்டுத் தொகை ஏதாவது கிடைத்ததா எனத் தெரிய வில்லை! மீதி 177. 7 ஏக்கர் நிலம் கோவில்களின் பெயரிலேயே ஹிந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
1991-ல், காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை துணைத் தலைவராக இருந்த “ஊர்வசி செல்வராஜ்” என்னும் கிறிஸ்தவர், இந்த 177.7 ஏக்கர் நிலத்தை விவசாய சாகுபடி செய்ய, குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த நிலத்தில் அவர் சசாகுபடி ஏதும் செய்யாமல், “ குயின்ஸ் தீம்ஸ் பார்க்” என்னும் உல்லாசப் பூங்காவாக மாற்றி விட்டார். இதனைக் காண உள்ளே போக ஆண்களுக்குக் கட்டணம் 500 ரூபாய்; சிறுவர்களுக்கு 450 ரூபாய். கோடி கோடியாக, கிறிஸ்தவரான செல்வராஜ் இந்த நிலங்களை வர்த்தக ரீதியாகப் (கமர்ஷியலாக) பயன் படுத்தி சம்பாதித்தாலும், குத்தகைப் பணம் ஒரு பைசா கூட , நிலத்துக்கு உரிமையாளரான ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கோ, ஸ்ரீ வேணுகோபால சாமிக்கோ இன்று வரை கொடுக்க வில்லை. இதே நிலத்தில் செல்வராஜ் “கிங் பொறியியல் கல்லூரி” என்னும் கல்லூரியையும் நடத்தி, மாணவர் சேர்க்கையில் கொள்ளை அடித்து வந்தார். இப்போது செல்வராஜ் இறந்து விட்டார். அவர் மனைவி நளினி ஒரு “இவாஞ்சலிஸ்ட்” மகன் அமிர்தராஜ் , காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர். அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள “எண்ட்டைம் ரிவைவல் மினிஸ்ட்ரீஸ் ( Endtime Revival Ministries) ” என்னும் இயக்கத்தின் உறுப்பினர். ஹிந்துக் கோவில் நிலத்தை அபகரித்து கிறிஸ்தவ சபை நடக்கிறது.
இந்த நிலத்தை மீட்டு, கோவில்களை நன்கு பராமரிக்க சில ஹிந்து பக்தர்கள் வழக்கு ஒன்றை செல்வராஜ், அமிர்தராஜ், நளினி ஆகியோர் மீது போட்டார்கள். 2008-ல் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டது. அதனை எதிர்த்து உயர் நீதி மன்றம் சென்றார்கள். 2013-ல் உயர் நீதி மன்றமும் கோவில் பக்கம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனாலும், விவசாயத்தைப் பண்ணாமலும், குத்தகையைக் கொடுக்காமலும், ஒப்பந்தத்தை மீறி வர்த்தக ரீதியில் நிலத்தைப் பயன் படுத்தி கோடிகளில் சம்பாதித்து மோசடி செய்து, நீதி மன்ற ஆணையையே மதிக்காமல் இருப்பது, இந்த மாதிரி ஆசாமிகளுக்கு வழக்கமாகப் போய் விட்டது.
இவர்களது மோசடியை காங்கிரஸ் தலைவியான சோனியாவுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே எஸ் அழகிரிக்கும் சிலர் எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை!
அமைச்சர், தன் பார்வையை, இடிந்து கீழே விழும் நிலையில் சிதிலமாகக் கிடக்கும் பாப்பான்சத்திரம் ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி, ஸ்ரீ வேணு கோபாலசாமி கோவில்களின் பக்கம் செலுத்தி, நிலத்தை உடனே இந்த நயவஞ்சகர்களிடமிருந்து பிடுங்கி, அற நிலையத் துறை மூலம், இக்கோவில்களை சீரமைத்து, கும்பாபிஷேகமும், சம்ரோக்ஷணமும், செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
காஞ்சீபுரம் பக்கம் தர்மப்பிரபுக்கள் இன்னும் இருக்கிறார்கள் அவர்களில் சிலரை இக்கோவில்களுக்கு தர்மகர்த்தாக்களாக நியமித்து விட்டால் முக்கால்வாசி வேலைகளை அவர்களே ஏற்று நடத்தி விடுவார்கள்.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...