Thursday, June 17, 2021

போய்ட்டு வாங்க.பார்ப்போம்..!

 என்ன திடீர்னு டெல்லி பக்கம்..?

30 நாள்ள 28 லெட்டர் எழுதிட்டேன்..எதுக்கும் பதில் இல்லை..அதான் நேர்ல பார்த்து கேட்கலாம்னு வந்தேன்..!
ஓஹ்.. அது என்ன..? 29 வது லெட்டரா..?
இல்லை.அந்த 28 ல என்னென்ன சொல்லிருந்தேனோ, அதையெல்லாம் சுருக்கமா எழுதி கொண்டாந்திருக்கேன்.என் ஞாபகத்துக்கு..!
சரி. என்ன வேணும்னு ஒவ்வொன்னா கேளுங்க..! முடிஞ்சா இப்பவே ஃபைசல் பண்ணிடலாம்.
அது வந்துங்க.. இந்த நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கணும்..!
அது என் கையில இல்லை. உச்சநீதிமன்ற மேட்டர். நான் ஒன்னும் பண்றதுக்கில்ல. வேணும்னா நீங்களே கோர்ட்ல ஒரு பெட்டிஷன் போட்டுப்பாருங்க. அடுத்தது..?
அந்த 7 பேரை விடுதலை பண்ணனும்..!
அதுல நான் செய்ய என்ன இருக்கு..? சட்டப்படி என்ன செய்யனுமோ அதை நீங்களே செய்யலாம்னு சொல்றாங்களே! செய்ய வேண்டியதுதானே..!
அதுவந்துங்க....
சரி.அடுத்தது..?
வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி பத்தலை. அதனால, கொஞ்சம் கூடுதலா நிதி ஒதுக்கணும்..!
என்ன திட்டம், எவ்வளவு நிதி வேணும்னு விலாவரியா சொல்லுங்க..
லெட்டர்ல பொதுவா, மொத்தமா சொல்லிருக்கோம். பார்த்து செய்ங்க..!
சரி.அடுத்தது..?
இப்படி எல்லாத்துக்கும் இப்பவே சட்டுனு பதில் கொடுக்கனும்னு அவசியம் இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, நிதானமா படிச்சி பார்த்துட்டு, யோசிச்சி பதில் அனுப்புனா போதுங்க..!
ஓ.கே. அப்பறம்..?
நீங்க தமிழ்நாட்டுக்கு அரசுமுறை விஜயம் பண்ணனும்.
வர்றேனே..அதுல என்ன இருக்கு..! நீங்க கோ-பேக் போட்டு பலூன்லாம் விட்டப்பவே வந்தவன்தானே நான்..!
அதையெல்லாம் மனசுல வெச்சிக்காதீங்க.இப்போ வெல்கம்னு பலூன்விட்டா போச்சி..! நாங்க இப்போ சுமூகமா இருக்கணும்னு பார்க்கிறோம்
அதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்..!
சரிங்க பிரதமர் ஜி.நாங்க கிளம்பறோம். நல்ல முடிவா சொல்லுங்க..!
போய்ட்டு வாங்க.பார்ப்போம்..!
நன்றி.வணக்கம்..!
(மாநிலத்தின் அனைத்து கோரிக்கைகளையும் "மத்திய அரசு" தாயுள்ளத்துடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கும்படி விடுத்த கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டார் - செய்தி)
May be an image of 2 people and text that says "STALIN το MEET PM MODI R. NEWS"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...