Saturday, June 5, 2021

அது என்னுடைய கவலை இல்லை.

 சீன ஞானி #கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு கன்பூசியஸ்

''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது. எந்த ரோஜாவும், தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை'' என்றார்.
உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் மனிதன் தன் அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான். அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக் கொண்டே இருக்கும்.
ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்ட போது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபடத் தொடங்கினர்.ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர். அந்த ஞானி சொன்னார்,'' எனக்குக் கடவுளிடம் எந்த வியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற்ற வேண்டுமா, மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன். ஆகவே, மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ, மரணத்தைப் பற்றி மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்?
May be an image of 1 person and beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...