Saturday, June 5, 2021

ஸ்டண்ட். தமிழக முதல்வருக்கு நன்றாகவே தெரியும் நீட் தேர்வை தமிழகத்தில் இல்லாமல் செய்யமுடியாது என்பது.…

 இன்று புதிய தலைமுறை விவாதத்தில் தமிழக அரசின் நீட் நிலைப்பாடு பற்றிய கேள்வியை முன்வைத்தார் நெறியாளர்.பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லையென்றும் அனைத்து மாநில அரசாங்கங்களும் மத்திய அரசும் சேர்ந்து உச்ச நீதி மன்றத்தை அனுகி விலக்கு கேட்டால் கூட அதை ரத்து செய்வது கஷ்டம் என்று கூறினார்.

இந்தவிஷயம் நமது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா?தெரிந்தும் அரசியல் வாதிகள் உதார் விடுகிறார்களா?அல்லது அதை வைத்து மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்கிறார்களா?என்பது தெரியவில்லை.
மற்றும் எத்தனை மாணவர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம்தான் இருக்கிறது என்றும் மாநில அரசுகள் அதை ரத்து செய்யும் உரிமை கிடையாது என்று தெரியும்.
மாணவர்கள் இந்த அரசியல் வாதிகளின்
உதார்களை நம்பாமல் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்.பெற்றோர்களும் இந்த விஷயத்தில் உஷாராக இருந்து மாணவர்களை சரியாக வழி நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...