Saturday, June 12, 2021

கிளைமேக்ஸ் காட்சியை முன்கூட்டியே காட்டிய படம்.

 இந்த படம் ஆச்சரியம் அல்ல ஆனால் இதில் நடித்த விஜயகாந்த் என்னை மிகவும் வியக்க வைத்தார்.

இப்படம் அவருக்கு 100வது படம் எந்த ஒரு முன்னணி நாயகனும் தன் 100வது படம் அதுவும் சொந்த படம் முதல் காட்சியில் தோன்றி மக்களிடம் கைதட்டல் வாங்க வேண்டும் என்ற என்னம் இருக்கும் அதுவும் இப்போது உள்ள அனைத்து நாயகர்கள் படத்திலும் முதல் காட்சியில் தரிசனம் தந்து அரங்கம் அதிர ஆரவாரம் நடக்கும்.
அந்த இலக்கணத்தை அடித்து நொறுக்கி கதை எந்த இடத்தில் நாயகன் வரவேண்டும் என்று கேட்கிறதோ அந்த இடத்தில் நான் வருகிறேன் என்று படம் துவங்கி 32 நிமிடம் கழித்து ஒரு கதாநாயகன் வருகிறான் இது எப்படி சாத்திய படுத்தினார் திரு செல்வமணி அவர்கள் மிக பெரிய துணிச்சல் வேண்டும்.
முதலில் ரசிகர்கள் அதை ஏற்க வேண்டும் என்னடா தலைவர காட்டாம இருக்கான் என்ற சலசலப்பு பேச்சுக்கு இடம் தராமல் தன் தலைவனை மறந்து படத்தின் காட்சி ஓட்டத்தில் ரசிகன் திகழ்ந்தான் என்றால் அது தமிழில் வந்த கேப்டன் பிரபாகரன் மட்டுமே.
முதல் காட்சியில் கடத்தல் இரண்டாவது காட்சியில் பாசமுள்ள பாண்டியரே அற்புதமான இசையில் உருவான பாடல் அனைவருக்கும் ஆட்டமா பாடல் தான் பிடிக்கும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இது திருவிழா பாடல் அதில் சட்டென்று மெலோடி புகுத்தி அசத்தி இருப்பார் ,பாடல் முடிந்த பிறகு வில்லன் அறிமுகம் சரத்குமார் &ரம்யா கிருஷ்ணன் உரையாடல் சண்டை காட்சிகள் என்று ஒரு 32 நிமிடம் நாயகன் இல்லாமல் ஒரு படத்தை சுவாரஸ்யமாக தந்த படம் இது.
இவ்வளவு செய்த இயக்குனர் நாயகன் அறிமுகத்தை சாதாரணமாக காட்டி விடுவாரா என்ன அதற்கு போலீஸ் ஸ்டேஷன் சண்டை காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது இந்த ஒரு சண்டை காட்சியை காண திரும்ப திரும்ப பார்த்தவர்கள் ஏராளம்.
இதன் பிறகு படம் முழுவதும் நாயகன் வீர தீர செயல்கள் தான் அதிலும் அடர்ந்த காட்டுக்குள் மிக பெரிய அளவில் எடுத்த பிரம்மாண்டமான திரைப்படம் .
ஆட்டமா பாடலுக்கு தெருவில் எங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தாலும் uniform போட்டு கொண்டு ஆடி கொண்டு இருப்பார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் பிரபலம்.அதிலும் இயக்குனர் நாயகனுக்கு நாயகிக்கு பாடல் கிடையாது இரண்டு பாடல்களும் மூன்றாவது கதாபாத்திரத்துக்கு தான் கிடைத்தது இப்போது இது போன்ற ஒரு நிகழ்வு நடக்குமா captain of the ship இதற்கு மிக பொருத்தமானவர் திரு செல்வமணி அவர்கள் .
செல்வமணி அவர்கள் படத்தை காட்டுக்குள் வைத்து முடித்து இருக்கலாம் ஆனால் காட்டுக்குள் தலைமறைவாக வாழும் வீரபத்திரன் அவனுக்கு எதற்கு இவ்வளவு பணம் தேவை இதை மக்களுக்கு தெரியப்படுத்த அங்கு ஒரு கோர்ட் செட்டப்பில் லியகாத் அலிகான் அனல் பறக்கும் வசனத்தில் மிக தெளிவாக படத்தை முடித்திருக்கிறார் செல்வமணி அவர்கள்.
இன்று பார்த்தாலும் இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கும் .
படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது கேரளாவில் டேம் திறந்து விடபட்டு நீர் சூழ்ந்த நிலையில் அங்கே தனக்கு சாதகமாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்து டம்மி மர கட்டைகள் போட்டு சந்தன மரம் மிதந்து வருவது போல் காட்சிகள் அமைக்கபட்டு இருக்கும் .
ஒரு இயக்குனர் இரண்டாவது படத்தில் இந்த அளவுக்கு அனைத்தும் கட்டி மேய்த்து super hit அடித்தது வரலாறு தான்.
May be an image of 1 person and body of water

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...