பேரறிவாளன் கைதாகி முப்பது வருடமாம்...
குண்டுவெடிப்பின் போது மரணமடைந்தவர்கள் 16 நபர்களின் பட்டியல்.
ராஜீவ் காந்தி:முன்னாள் பிரதமர்
தர்மன்: காவலர்
சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர்
ராஜகுரு: காவல் ஆய்வாளர்
சந்திரா: மகளிர் காவலர்
எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர்
கே. எஸ் முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர்.
லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்
டேனியல் பீட்டர்: பார்வையாளர்.
கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள்.
லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர்
சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவர்
பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர்
எத்திராஜூ முருகன்: காவலர்
ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர்
மேலும் காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர்.
இதில் சந்திரா என்னும் காவலர் சகோதரியின் 1 வயது குழந்தையை வைத்து அவருடைய கணவர் பட்ட பாடு எத்தனை பேருக்கு தெரியும்?
சந்திராவின் மகள் அம்மாவின் மரணத்தால் பிற்பாடு வளர்ந்து திருமண வயதில் புத்தி பேதலித்து இறந்து போனார்..
இதில் விரல் துண்டாகி காயம்பட்ட காவலர் அனுசுயா இன்னம் நிவாரணத்திற்க்கு அலைகின்றார்..
இறந்து போன லீக் முனுசாமி மகன் கூறுவதை கேளுங்கள் மருத்துவமனையில் தந்தையின் உடல் – இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. “ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது’ என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்..
அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.
“தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?””எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?””இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?” என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.””அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,” என காரணம் சொன்னார். “”எங்கள் குடும்பத்துக்கு நடந்த, “துன்பியல் சம்பவம்’ கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?” என்கிறார்..
இன்னையோட 30 வருடமாம்..
இந்த 30 வருடத்தில் இறந்து போன குடும்பத்தினர் நிலை இப்படி என்றால் கொலை குற்றவாளிகள் நிலையை பாருங்க.,
இந்த 30 வருடத்தில் சிறையில் உள்ள நளினி தனது மகளை லண்டனில் மருத்துவம் படிக்க வைத்திருக்கிறாள்...தனக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இருக்கிறாள்...இப்ப தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறாள்..
பேரறிவாளன் இந்த 30 வருடத்தில் உடல் நலம் குன்றி படுத்து படுக்கையாக உள்ள தந்தையையும் கவனித்து தனது சகோதரி திருமணம் முடித்து வைத்துள்ளான்...குடும்பத்தில் இரண்டு ஆண்களும் இல்லாமல் அற்புதம்மாள் மட்டும் தனியாக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று மிக பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இருப்பது மட்டுமல்லாமல் குடும்ப தேவைகளையும் நிறைவேற்றி இப்ப மகனுக்கு திருமணம் முடிக்க ஆவலாக இருக்கிறாள்..
இதெல்லாம் மிக பெரிய மிராக்கிள்...
*பல நீதிமன்றங்களில் நிருபணம் ஆகியும் நாங்க செய்தது தவறு என்றோ இவங்க எங்கள செய்ய சொன்னாங்க கூலிக்கு செய்தோம் என ஒப்புக்கொள்ள மறுத்த காரணமே இந்த மிராக்கிள் நிகழ காரணம்......*
ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னம் அவதிபட்டு தான் வருகின்றனர்..
No comments:
Post a Comment