தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் சாதாரண மக்களின் உயிர் பற்றி துளி கூட அக்கறையில்லை என்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்து வருகிறார்கள், ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு தமிழக மக்களுக்கு இல்லை என்பதே சோகம் -
கொரோனா முதல் அலையை விட பலமடங்கு அதிகமாக இரண்டாம் அலையில் சிக்கி பலர் மாண்டு போயினர், பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன -
இந்த நேரத்தில் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், அரசு சம்பளம் பெருபவர்களுக்கும் தொற்று பாதித்து மரணிக்க நேர்ந்தால் கூட பொருளாதார ரீதியாக அவர்கள் குடும்பத்தினர் அதிகமாக பாதிக்கப்பட மாட்டார்கள் -
ஆனால், தினக்கூலிகளாக நிச்சமற்ற வாழ்க்கை வாழ்பவர்களை ஒரு மரணம் கூட குடும்பத்தையே புரட்டிப் போட்டுவிடும், இவர்களுக்குத்தான் அரசு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும், இவர்களில் பலருக்கு சரியான முகக்கவசம் கூட கிடைப்பதில்லை என்பதே சோகம், மேலும் இத்தொற்று குறித்த அறிவும் இவர்களிடம் இன்னும் இருப்பதில்லை -
எனவே, அரசு முதலில் இவர்கள் மீதுதான் அக்கறை செலுத்தி பாதுகாக்க வேண்டும் ஆனால் அரசும், அமைச்சர்களும் இவர்களை கிள்ளுக்கீரைகளாக, இன்னும் சொல்லப் போனால் விலங்குகளுக்குச் சமமாக நினைக்கின்றரோ என எண்ணத்தோன்றுகிறது -
முதலாவதாக ஊரடங்கின் அர்த்தத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் இவர்கள் ரேஷன் பொருட்களையும், இரண்டாயிரம் ரூபாய் இலவசத்தையும் எல்லா இடங்களிலும் விளம்பரத்திற்காக மக்களை பல இடங்களில் கூட வைத்து பல மணிநேரம் பாதுகாப்பின்றி நிற்க வைத்துத் தருகின்றனர் -
முதலில் டோக்கன் வழங்க ஒருமுறை, அடுத்து பொருட்கள் வழங்க ஒருமுறை என்று மக்களை நாய்களைப் போல அலைய விடுகின்றனர், அதிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும் -
மத்திய அரசு 19 கோடி விவசாயிகளுக்கும் 35 கோடி ஜன்தன் பயனாளர்களுக்கும் சில நிமிடங்களில் நிவாரன நிதிகளை வரவு வைத்து வருகிறது, மாநில அரசால் வெறும் இரண்டு கோடி பயனாளர்களுக்கு இதைச் செய்ய முடியாதா?, அதே போல இன்னும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பலரை பல மணி நேரம் வரிசையில் நிற்க வைத்து ரேஷன் பொருட்களை வழங்குவதைவிட தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களை வைத்து அவரவர் வீடுகளுக்கே கொண்டு சேர்க்க முடியாதா? முடியும் அரசு நினைத்தால் நிச்சயம் முடியும் ஆனால் தாங்கள் எதையோ பெரிதாக வெட்டி முறித்து விட்டதாக விளம்பரம் செய்ய முடியாதே -
அடுத்ததாக டாஸ்மாக் திறப்பு கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளுக்காக டேக் டைவர்ஷன் போர்டு வைக்குமளவிற்கு ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் துளிகூட சமூக இடைவெளி பாதுகாப்பின்றி இவர்களிலும் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகளே, அதிலும் டாஸ்மாக் ஊழியர்களே பாட்டிலுக்கு மேல் 50, 100 என்று அதிக விலை வைத்து கொள்ளையடிப்பதும் நிகழ்ந்தது -
அரசு இவர்களை சொரிநாயைவிட கேவலமாக நடத்துவதை நேரில் பார்த்தவர்களுக்குப் புரியும் -
எதற்காக இவ்வளவு அவசரமாக கடைகளைத் திறக்க வேண்டும் என்று கேட்டால் அரசிற்கு வருமாணம் இல்லையாம் -
நன்றாக சிந்தித்துப் பாருங்கள், இன்னும் ஒரு மாதம் கழித்து தொற்று குறைந்தவுடன் கடைகளைத் திறந்தால் அரசுக்கு வெறும் 30 ,000 கோடிகள் ம்ட்டும் தான் இழப்பு ஏற்படும் ஆனால், எத்தனை உயிர்கள் போகப் போகின்றன, எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரப்போகின்றன என்று தெரியுமா? -
அது மட்டுமல்லாமல், தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கியிருக்க முக்கியமான காரணங்களில் குடியும் ஒன்று ஆம், தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட காலம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற விதி இருப்பதால் பலர் இன்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவில்லை, துப்புறவுப் பணியாளர்களில் பலர் நேரடியாகவே இதைக் கூறி தடுப்பூசி போட மறுத்துவிட்டனர் -
இந்த நேரத்தில் மக்கள் உயிர் மீது அக்கறை இருக்கும் அரசென்றால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியிருக்கலாம், மக்களைப் பற்றி சிந்திக்கும் அரசு அதைத்தான் செய்யும் ஆனால் நமக்கு வாய்த்திருப்பது?_
இலவசம், இலவசம், நகைக்கடனை தள்ளுபடி செய், விவசாயக் கடனைத் தள்ளுபடி செய், காலைக்கடனை தள்ளுபடி செய் என்று ஏங்கும் சுயநலவாதிகளே -
இந்தப் பணமெல்லாம் எங்கோ சில ஏழைகள் தங்கள் உயிர்களை அடமாணம் வைத்து அதிலிருந்து அரசாங்கம் உங்களுக்குத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment