Friday, June 11, 2021

அரசியல்_செல்வம்.

 இந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருக்காரே நல்ல அரசியல் ராசியுள்ளவர்.. சினிமாவில் சொந்தப்படம் எடுத்து ஒரு சில படங்களில் தலை காட்டி நிலையான இடம் இல்லாது தவித்துக் கொண்டிருந்த சரத்குமாருக்கு புலன் விசாரணையில் நல்ல ரோல் தந்தார்.. அவரும் எம்பியாகி..

இப்போ ஒரு கட்சிக்கும் தலைவர்.. அடுத்து விஜயகாந்த் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவே ஆனார்.. சிகரம் வைத்தார் போல இவர் படத்தாலேயே அவருக்கு கேப்டன் பட்டமும் கிடைத்தது.. இவர் இயக்கத்தில் அருண்பாண்டியனும் நெப்போலியனும் இணைந்து நடித்த ராஜ முத்திரைன்னு ஒரு படம்..
நெப்போலியன் மத்திய அமைச்சரானார்.. அருண்பாண்டியன் தமிழக எம்.எல்.ஏ.ஆனார்.. இன்று அவரது அறிமுகமும் அன்பு மனைவியுமான ரோஜா ஆந்திராவில் மாநில கேபினட்டில் இடம் பெறுகிறார்.. அட இவ்வளவு ஏன் இவர் அறிமுகப்படுத்திய மன்சூரலிகான் கூட அரசியலில் இருக்கிறார்..
ஆக இவ்வளவு அரசியல் ராசியுள்ள செல்வமணியின் படத்தில் நடித்து தற்போது இண்டு இடுக்குகளில் பதுங்கியிருக்கும் நடிகர் நடிகைகள் உடனடியாக எங்கிருந்தாலும் விளா மேடைக்கு அருகில் வந்து அரசியலில் ஈடுபடலாம்.. ஆர்.கே.செல்வமணியின் ராசி உங்களை உயர்த்தும்.
May be an image of 2 people, people smiling and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...