நண்பர்களே
ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாழ்ப்பா என்பது
எல்லா இடத்திலும் புரியும் நல்ல சொல்லாடல் வழக்கு...
"என் மகன் அப்பாவி...
அவனுக்கு ஒன்னுமே தெரியாது"
"இந்த குற்றச்சாட்டெல்லாம் சிபிஐ செய்த சதி"
"இதெல்லாம் அபாண்டம்"
என்று எல்லா இடத்திலும் ஒரே டேக்கில் ஓ கே வாக்கும் தேர்ந்த
தாய்க்குலமான அற்புதத்தம்மாள்
இன்னும்....
"ராஜீவ்காந்தி தன்னோட செத்த பதினெட்டுபேர் கேட்டுக்கொண்டதற்கிணங்க
அவரே வெடி வைத்துக்கொண்டுதான் செத்தார்"
என்ற ஒன்று மட்டும்தான் சொல்லவில்லை...
நண்பர்களே....
91 ல் பேரழிவாளன் கைது செய்யப்படுகிறான்
91ல் இருந்து 2013 வரை அற்புதத்தம்மாள் என்ன செய்து கொண்டிருந்தார்?
அவர் அந்தப்பதினைந்து ஆண்டுகாலம் எந்தப்பத்திரிகையாளர்களிடமும் இப்போது உள்ளது போல குமுறி நடிக்காதது ஏன்?
அவருக்கே தெரியும்
தன் மகன் தப்பானவன் என்பது....
அவர்கள் குடும்பமே
ராஜீவ் கொலைச்சதியில்
விரும்பி பணத்திற்காக பங்கேற்ற குடும்பம்
இந்த குண்டு வெடிப்பு சதிக்காக
பேரழிவாளன் கலைஞர் வி பி சிங்
கூட்டத்திலும் ஒத்திகை பார்த்துள்ளான்
நண்பர்களே..
1991 நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்த நேரம்.
திமுகவும் விபிசிங்கின் தேசிய முன்னணியும்
கூட்டணி அமைத்திருந்தன. இக்கூட்டணியின்
சார்பாக
சென்னை நந்தனத்தில் 07.05.1991ல்
பிரம்மாண்டமான ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வி பி சிங் பங்கேற்றார்.
கலைஞரும்
வி பி சிங்கும் கூட்டாகப் பிரச்சாரம் செய்யும்
கூட்டம் அது.
இக்கூட்டத்தை தனது கொலைச் சதிக்கான
ஒத்திகையாக ஆக்கிக் கொண்டான் சிவராசன்.
சிவராசன், பேரழிவாளனுடன் தாணு, சுபா, நளினி
ஆகிய மூன்று பெண்களும் இக்கூட்டத்தில்
பங்கேற்றனர்.
இந்த ஒத்திகையின் சிறப்பு அம்சம் என்னவெனில்
இக்கூட்டத்தில், தாணுவால்
வி பி சிங்கை
நெருங்க முடிந்தது,
இவை அனைத்துக்கும் புகைப்பட
ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.
.
மேலும் 20.05.1991 அன்று, கொலைக்கு ஒரு நாள் முன்பு,
நளினியின் தாயார் நர்ஸ் பத்மாவின் வீட்டில் வைத்து
கோடக் கலர் பிலிம் ரோல் ஒன்றை ஹரிபாபுவிடம்
வழங்கினான் பேரறழிவாளன்.
இவ்வாறு கொலைச்
சதியில் பல்வேறு இடங்களில் பேரழிவாளன்
தொடர்பு கொண்டிருப்பதும் பங்கேற்றுள்ளதும்
சாட்சியங்களால் நிரூபிக்கப் பட்டுள்ளன.
மேலும் இவை அனைத்தையும் பேரறிவாளனின்
வழக்கறிஞர் சீனியர் அட்வகேட் திரு நடராசன்
தம்முடைய வாதத்தில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இவை அனைத்தும் நீதியரசர் வாத்வா அவர்களின்
தீர்ப்பில் சொல்லப் பட்டிருக்கின்றன. இதோ
நீதியரசர் வாத்வா தீர்ப்பு வாசகங்கள்:
On 18.4.1991 Nalini (A-1), Murugan (A-3), Arivu (A-18) and
Suba Sundaram (A-22) and deceased accused Haribabu
attended the meeting of Rajiv Gandhi and Jayalalitha at Marina
Beach, Madras.
On the night between May 7-8, 1991 Nalini (A-1), Murugan (A3),
Arivu (A-18) and deceased accused Sivarasan, Subha, Dhanu and
Haribabu attended the meeting of Prime Minister V.P. Singh at
Nandanam, Madras,
where they conducted a 'dry run' by securing
access to V.P. Singh for garlanding him.
Arivu (A-18) gave a Kodak colour film roll to Haribabu.
This Kodak colour film was to be used by Haribabu to
take pictures of the scene of crime.
கொலைச்சதி சாட்சியங்களோடு
சந்தி சிரித்த பின்னரும்கூட
இந்திய அரசின் போற்றப்பட வேண்டிய போலீஸ் துப்பறியும் அமைப்பான
சிபிஐ அதிகாதிகள்
தங்களின்
பல்லாண்டுகால பேருழைப்பில்
இது சர்வதேச பார்வைக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால்
உறுபசி ஊண் உறக்கம் மறந்து தீயாய் செயல்பட்டு
கண்டுபிடித்த கயவர்களை விடுவிக்க கோருவது விஷமத்தனமானதாக இல்லை!
நல்லவர்கள் என்று
அவர்களை ஏவிவிட்டவர்களின்
ஏவலாளர்கள் கோடி கோடியாக வாங்கிக்கொண்டு கோரஸ் பாடினால்
கோட்டையிலிருப்பவர்கள் கேட்கக்கூடாது!
கொள்கையை மறந்து கோழைகளாக மாட்டார்கள் கொடி பிடிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் என்பதை உலகறியச் செய்ய
தொண்டர்கள் ஒன்று கூடுவோம்
தலைவர் ராஜீவை கொன்ற
கூடவே பதினெட்டு அப்பாவித்தமிழர்களை எரித்துக் கொன்ற
ஏழு துன்மார்க்க கொலையாளிகளையும் சாகும் வரை சிறையிலிருக்க சங்கநாதம் முழங்குவோம்...
வாழ்க தலைவர் ராஜீவ் புகழ்.
No comments:
Post a Comment