Monday, June 14, 2021

ஆமாம் அய்யா நிறைய இருக்கிறது எழுதுவதற்கு.

 வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை தான் ரேஷன் கடைக்குச் செல்வோம். இந்த மாதம் (லாக்டவுன் காலத்தில்) நான்கு முறை செல்ல வேண்டி இருந்தது, டோக்கன் வாங்க இரண்டு முறை பொருள் வாங்க இரண்டு முறை. உங்கள் பக்கமெல்லாமும் அப்படித்தானா.?

வீட்டுக்கு டோக்கன் வரும் என்றார்கள். வீட்டுக்கு டோக்கன் வரவில்லை. அது போகட்டும். போனால் கூட இப்ப இல்ல மாலை வாருங்கள் என்று கூறுகின்றார்களே.
அதே போலத்தான் மின் கட்டணமும் ஒருவர் வீடுகளுக்கு வந்து கணக்கு எடுப்பது எப்படி. ரீடிங்கை புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வீடு மக்கள் அலைவது எப்படி? வயது முதிர்ந்தவர்கள் உட்பட மின் கட்டணம் கட்டும் வரிசையில் ஜூன் இரண்டாம் தேதி ஐம்பது பேர்க்கு மேற்பட்டோர் மொபைலும் கையுமாக நின்றனர். சிலரைப் புகைப்படம் சரியாக எடுக்கவில்லை என்று திருப்பி அனுப்பினார்கள். அதில் ஒரு முதிய பெண் “எப்படி எடுக்கறதுன்னு தெரியலை. சரி யாரையாவது விட்டு எடுத்துக்கிட்டு நாளைக்குத்தான் வரவேண்டும்” என்று வருந்தியவாறு சென்றார்.
புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றவர்களுக்கும்
“இங்க பதிய மாட்டோம், இந்த எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள் என்று கூறினார்கள். அந்த வாட்ஸப் எண்ணும் அந்த அலுவலகம் சென்றுதான் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏன் இப்படி குளறுபடி?
பாவம் மக்கள். தேவையின்றி வெளியே வர விரும்பாவிட்டாலும் இது போன்ற அலைக்கழிப்புகள். அவர்கள் என்ன செய்வார்கள். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாவற்றையும் முதல்வரே வந்து கை பிடித்துச் சொல்லித் தரவேண்டுமா? ஒவ்வொரு அலுவலகத்துக்கும் தலைமை என்று ஒரு பதவி இருக்குமே. அவர்கள் இந்த சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து செப்பனிடவேண்டாமா?
மின் கட்டண அலுவலகத்தில் நான் சென்ற அந்த நாள் வேலை பார்த்ததும் இரண்டு பெண்கள். பில் கவுண்டரில் அமர்ந்த ஆண்கள் இரண்டு பேர் வழக்கம் போல் சிரித்தும் கிண்டலடித்துக் கொண்டும் வரிசையை துரிதமாக குறைக்கவேண்டும் என்னும் பொறுப்புணர்வு சிறிதளவும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து வெதும்பி வந்தேன். எல்லை மீறிய கோபம்.... பேசும் நிலையில் நான் இல்லை அதனால்.
நீளம் கருதி சுருக்கமாக எழுதி உள்ளேன். மின் கட்டண அலுவலகத்தில் மேலே போங்க கீழே போங்க என்று சுற்ற விட்டதை எல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே போகும்.....
இப்படி அனுபவம் யாருக்கேனும் இருந்ததா? சொல்லுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...