பார்லிமென்டில் தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் பராமரிப்பு இல்லாமலும், பணிகளை கவனிப்பதற்கு அலுவலர்கள் நியமிக்கப்படாமலும் கேட்பாரற்று கிடப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், பார்லிமென்ட் கீழ் தளத்தில் தி.மு.க.,வுக்கு என அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
நியமிக்கப்படவில்லை
இரு சபைகளுக்கும் வெகு எளிதாக செல்லும் வகையில், மைய மண்டபத்திற்கு மிக அருகிலேயே இந்த அலுவலகம் உள்ளது. இந்த இடத்துக்கு பல கட்சிகளும் போட்டி போட்ட நிலையில், தி.மு.க.,வின் எண்ணிக்கை பலத்திற்காக இந்த அறை தரப்பட்டது. ஆனாலும் அந்த அறையை பராமரிப்பதற்கு என, கட்சியின் சார்பில் பணியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. தினமும் பல கடிதங்கள் வரும். சபாநாயகர் அலுவலகத்திலிருந்து முக்கிய தகவல் பரிமாற்றங்களும் கூட இருக்கும்.ஆனால், இவற்றை கவனிப்பதற்கு அங்கு யாருமே இல்லை.
![]() |
ஆச்சரியம்
தொடர்ந்து கொரோனா பிரச்னையும் வந்து சேரவே, அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.அருகில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் பணியில் உள்ளவர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்திலிருந்தே சம்பளம் தரப்பட்டு, முறையாக பல ஆண்டுகளாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், போதுமான அலுவலர்கள் இல்லாமலும், முறையாக கவனிக்கப்படாமலும், ஆளும் கட்சியான தி.மு.க.,வின் அலுவலகம் கிடப்பது ஆச்சரியமாக உள்ளது..

No comments:
Post a Comment