Wednesday, June 9, 2021

ஊடகங்கள் விவாதிக்குமா?

 திமுக பேச்சாளன் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை?

ஊடகங்கள் விவாதிக்குமா?
தற்கொலையா? கொலையா? மர்மம் கலையுமா?
சித்ரவதை செய்தானா? சீரழித்தானா?
இல்லை நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு அதனால் மனம் உடைந்து போய் தற்கொலை என்று கேஸை முடிப்பார்களா?
ஊடகங்கள் விவாதிக்குமா?
பெண்ணுரிமை 'கொண்டைகள்' தாங்கள் திறக்க வேண்டிய வாயை உரிய முறையில் திறப்பார்களா?
நுங்கம்பாக்கம் ஸ்வாதி என்ற பிராமணப் பெண் ஒரு 'விளிம்பு நிலை' சமுதாயக் கயவனால் குத்திக் கொல்லப்பட்ட போது...
இந்த பெண்கள் உரிமை அமைப்புகள் திறக்க வேண்டிய வாயைத் திறக்காமல் பொத்திக் கொண்டு விரதம் காத்தார்களே - அதே போல இப்போதும் காப்பார்களா?
பாவம் அந்த ஸ்வாதி - அவளை ஒரு தலையாக விரும்பிய கயவன் - நார் நாராகக் குத்திக் கிழித்த போது 2016 ல்....
இதே ஊடகங்கள் விவாதம் என்ற பெயரில் அந்த அப்பாவிப் பெண்ணை எப்படி எல்லாம் அவளது கொலையை 'வெவ்வேறு கோணங்களில்' விவாதிப்பது என்ற பெயரில் அந்தப் பெண்ணின் நடத்தை உட்பட கேள்விக்கு ஆளாக்கினார்கள் - விவாதம் என்ற பெயரில்?
இப்போது ஊடகங்கள் இதை - தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை என்று கூறப்படும் மரணத்தை...
'வெவ்வேறு கோணங்களில்' விவாதிப்பார்களா?
கொலையா? தற்கொலையா? இவன் தற்கொலைக்குத் தூண்டினானா? சித்ரவதை செய்தானா? இல்லை வெவ்வேறு வகையில் அந்தப் பெண்ணை சீரழித்தானா?...
உண்மை வெளியே வர வேண்டும் என்றுதான் நாமும் விரும்புகிறோம்.
தமிழன் பிரசன்னாவை கேவலப்படுத்துவது நமது நோக்கம் அல்ல!
அவன் எவ்வளவு கேவலமான இழிவான வகையில் மோடியை வசை பாடி இருந்தாலும் - அவனை கொச்சைப் படுத்துவது நமது நோக்கம் அல்ல!
ஒருவேளை உண்மையாகவே அது GENUINE தற்கொலையாக இருந்தால் -
வேறு இவனுடைய தரப்புக் காரணம் ஏதும் இல்லாமல் - அந்தப் பெண் ஒரு பைத்தியக் காரத் தனத்தை செய்திருப்பாள் என்றால் -
அந்த 'வாழ வேண்டிய' இளைஞனுக்கு நமது அனுதாபங்கள்.
ஆனால் இது நிரூபிக்கப் படும் வரை சகல கோணங்களிலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
மற்றதற்கெல்லாம் - எங்கோ வட இந்திய மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டால் - வரிந்து கட்டிக் கொண்டு விவாதிக்கும் ஊடகங்கள்...
ஏதோ ஒரு பாஜக ஆளும் மாநிலத்தில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றத்தை பூதாகாரப்படுத்தி...
மோடி அரசில் பெண்கள் வாழவே பாதுகாப்பில்லை என்ற வகையில் ஊதி ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணுரிமை "கொண்டை" கள்....
இப்போது திமுகவின் முக்கியப் பிரமுகர் மனைவி தற்கொலை செய்தியை...
மூடி மறைத்து மழுப்பாமல், வாயில் முழுநீள வாழைப்பழத்தை வைத்துக் கொள்ளாமல்...
பெண்ணுரிமை மாதர் சங்கங்களின் "கொண்டைகளும்" திறக்க வேண்டிய உதடுகளைத் திறக்காமல் மூடி வைத்துக் கொண்டு இருக்காமல்...
சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எல்லாரும்....
இந்த தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரத்தை....
அதன் பல்வேறு கோணங்களில் - இறந்த பெண்ணுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எதனால் "மன உளைச்சல்" ஏற்பட்டது? அவர் தற்கொலையைத் தானே நாடினாரா? தூண்டப்பட்டாரா? டார்ச்சர் செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது மணவாழ்க்கை விவகாரமா?
விடாதீர்கள் ஊடகங்களே!
இனி ஒரு வாரத்துக்கு இதைப் பல்வேறு கோணங்களில் அலசி அலசி அலசி... விவாதியுங்கள்!
"பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவர் செய்தாலும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது"- என்று சமீபத்தில் - பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் பேசிய - முதல்வர் அவர்கள்...
இந்த விஷயத்திலும் தனது கட்சிக்காரர் என்று பாரபட்சம் பார்க்காமல் அவரது மனைவி உண்மையிலேயே தற்கொலையா? அப்படி எனில் என்ன காரணம்? - இவற்றை அக்கு வேறு ஆணிவேறாக விசாரிக்க வேண்டும்!
முதல்வர் மிகவும் நியாயமாக நடப்பவர் என்ற நம்பிக்கை - இதை ஊடகங்கள் பெரிது படுத்தாமல் மூடி மறைக்க எந்தவித அதிகார அழுத்தமும் தரமாட்டார் - என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது!
எனவே அவர் மனைவி நதியாவுக்கு நீதி வழங்க வேண்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...